பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 10 குறைப்பு? பொதுமக்களுக்கு மத்திய அரசு தரும் தீபாவளி பரிசு
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ரூ. 10 வரை குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை என்பது சந்தையில் இருக்கும் சூழலைப் பொறுத்து பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்கின்றன. பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த விலையைத் தினசரி மாற்றிக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 1.4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமலேயே இருந்து வருகிறது. அதாவது கடந்த 2022 மே 22ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் வரவில்லை.
பெட்ரோல், டீசல் விலை: தலைநகர் சென்னையில் இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆக உள்ளது. அதேபோல டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 ஆகவே தொடர்கிறது. அதாவது 531ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இன்றி தொடர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரிகள் பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அப்படி விலை குறைக்கப்படும் நிலையில், அது விலைவாசி அதிகரிப்பதையும் நிச்சயம் கட்டுப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
தீபாவளி பரிசு: வரும் 12ஆம் தேதி நாடு முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அப்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்குத் தீபாவளி பரிசாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டும் இப்படி தான் தீபாவளி சமயத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது.
இதற்கு அப்போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மீண்டும் இந்தாண்டும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசுக்கு ஏற்கனவே வருவாய் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இந்த கலால் வரி குறைப்பு நடவடிக்கை பெரும் சிரமத்தையே தரும். இதனால் இந்த வரி வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டலாம் என்பது தீவிர ஆலோசனை நடத்து வருகிறது. மாற்று வழிகள் இறுதி செய்யப்பட்ட உடன், தீபாவளிக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இஸ்ரேல் ஹமாஸ் விவகாரம் தொடங்கி பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 87.86 டாலராக இருக்கிறது. எனவே, இதையும் கருத்தில் கொண்டே மத்திய அரசு விலை குறைப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications