ஒரு துளியும் மாற்றமில்லை.. 64வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்
சென்னை: சென்னையில் இன்றும் 64வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாததால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இந்த விலை மாற்றத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விவை 24 மணிநேரத்துக்கு ஒருமுறை மாறுவது வழக்கமாக உள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்வு ஒரு லிட்டரின் விலை ரூ.110யை தொட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
அதாவது தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மே 21ல் ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. இதையடுத்து ஓரளவு எரிபொருட்களின் விலை குறைந்தது. இருப்பினும் தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை ரூ.100யை கடந்து விற்பனையாகிறது.
கடந்த 2 மாதமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று (ஜூலை 24ம் தேதி) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் தொடர்ந்து மாற்றமின்றி 64வது நாளாக ஒரேவிலையில் விற்பனையாகி வருகிறது. விலை உயராமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications