தொடர்ந்து மாற்றமில்லை.. 66வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்!
சென்னை: சென்னையில் இன்றும் 66வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாததால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விவை 24 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு லிட்டரின் விலை ரூ.110யை தொட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
அதாவது தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மே 21ல் ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. இதையடுத்து ஓரளவு எரிபொருட்களின் விலை குறைந்தது. இருப்பினும் தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை ரூ.100யை கடந்து விற்பனையாகிறது.
கடந்த 2 மாதமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று (ஜூலை 26ம் தேதி) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் தொடர்ந்து மாற்றமின்றி 66வது நாளாக ஒரேவிலையில் விற்பனையாகி வருகிறது. விலை உயராமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications