மாற்றமா.. இல்லவே இல்லை.. 68வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்!
சென்னை: சென்னையில் இன்று 68வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாததால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விவை 24 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்வு ஒரு லிட்டரின் விலை ரூ.110யை தொட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
அதாவது தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மே 21ல் ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த மே 22ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. இதையடுத்து ஓரளவு எரிபொருட்களின் விலை குறைந்தது. இருப்பினும் தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை ரூ.100யை கடந்து விற்பனையாகிறது.
கடந்த 2 மாதமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று (ஜூலை 28ம் தேதி) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையானது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் தொடர்ந்து மாற்றமின்றி 68வது நாளாக ஒரேவிலையில் விற்பனையாகி வருகிறது. விலை உயராமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications