அப்பாடா.. ரொம்ப நாள் ஆச்சு "இதை" கண்ணால பார்த்து... பூரிப்பில் மக்கள்!
80 ரூபாய்க்கும் கீழே பெட்ரோல் விலை குறைந்துள்ளது.
சென்னை: அப்பாடா... ரொம்ப நாள் ஆச்சு இதை கண்ணால பாத்தும்... காதால கேட்டும்... விஷயம் என்ன தெரியுமா? பெட்ரோல் விலை 80 ரூபாய் கீழே வந்துருச்சு!
கஜா புயல் சோகத்திலும் நமக்கு ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது இதுதான்!! எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.
சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாசத்திலிருந்து மாற்றப்பட்டு, அதிலிருந்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

எரிச்சலில் மக்கள்
என்றைக்கு இது நடைமுறைக்கு வந்ததோ அன்னையில இருந்தே நமக்கு தலைவலிதான்! இஷ்டத்துக்கும் எரிபொருட்களின் விலையை உயர்த்தி உயர்த்தி மக்கள் கடுமையாக எரிச்சல் அடைந்தார்கள்.

நாங்களா ஏத்தறோம்?
அப்பப்போ போராட்டம் செய்ற நிலைமைக்கும், பாரத் பந்த் நடத்துற நிலைமைக்கும்கூட போய்விட்டோம். ஏன் இப்படி பெட்ரோல், டீசல் விலையை அநியாயத்துக்கு ஏத்தறீங்கன்னு கேள்வி கேட்டதற்கு, "நாங்களா ஏத்தறோம்.. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல்தான்... அதனாலதான் விலை உயருது" என்று மத்திய பாஜக காரணம் சொல்லி வந்தது.

ரூ.80-க்கும் கீழே
ஆனால் இப்போ நிலைமை அப்படி இல்லை. கொஞ்ச நாளாகவே பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருகிறது. அதுவும் ரொம்ப நாளைக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் விலை ரூ.80-க்கு கீழே சென்றுள்ளது. இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை ரூ.79.87 காசாகவும், இதே போல் டீசல் விலை ரூ.75.82 காசாகவும் உள்ளது.

ஈராக் சிக்கல் என்னாச்சு?
இதெல்லாத்துக்கும் காரணம் சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள்தான் என்பது நாடறிந்த வெட்ட வெளிச்சமான உண்மைதான்! தேர்தலை கணக்கு பண்ணி பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இப்போ மட்டும் ஈரானுக்கு எந்த சிக்கலும் இல்லையா என்று தெரியவில்லை. எப்படியோ, 80 ரூபாய் கீழே பெட்ரோல் விலையை பார்த்தே ரொம்ப நாளாச்சு என்று வாகன ஓட்டிகள் பூரிப்பில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications