சூப்பர்ல... இப்படியே "இது" இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்ததுள்ளது.
சென்னை: சூப்பர்ல... இன்னைக்கும் பெட்ரோல் விலை சென்னையில குறைஞ்சி இருக்கு.
தமிழ்நாட்டில் கஜா புயல் சோகத்திலும் நமக்கு ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது பெட்ரோல் விலை குறைந்து இருப்பதுதான்.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாசத்திலிருந்து மாற்றப்பட்டு, அதிலிருந்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

உச்சத்தை தொட்டது
இப்படி தினந்தோறும் விலை மாற்றம் வந்ததிலிருந்தே நாட்டு மக்களுக்கு தலைவலிதான்! நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே போனது. "உச்சதை தொட்டது, உச்சத்தை தொட்டது" என்று எதுதான் உச்சம் என்றே தெரியாமல் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பற்றின செய்திகள்தான் மீடியாவில் முக்கிய இடத்தை பிடித்து வலம் வந்தன.

பாரத் பந்த்
இதனை கண்டித்து மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள். கடைசியில் நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து பொது வேலைநிறுத்தம் கூட நடத்தினார்கள்.

ஈராக்தான் காரணம்
ஆனால் எதற்குமே மசியாமல், அசைந்து கொடுக்காமல், காதிலேயே போட்டுக் கொடுக்காமல் இருந்தது மத்திய அரசு. காரணம் கேட்கும்போதெல்லாம் ஈராக்கைதான் கை காட்டியது. "அவங்க விலை ஏத்தினால் நாங்க என்ன பண்ணுவது" என்ற காரணத்தை சொல்லி சொல்லியே இதுநாள் வரை தப்பித்து வந்தது.

மக்கள் மகிழ்ச்சி
ஆனால் திடீரென்று, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. நல்ல மாற்றம்தான்.. கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைய ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் நம்மால் இதை நம்ப முடியவில்லைதான். ஆனாலும் தினந்தோறும் விலை குறைந்து கொண்டே சென்றது. 2 நாளுக்கு முன்பு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதை பார்த்து மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.

இன்றைய விலை
இன்றைக்கும் பெட்ரோல் டீசல் விலை குறைந்துதான் உள்ளது. நேற்றைய நிலையிலிருந்து இன்றைய பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 79.66 -ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ. 75.63 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

விலை குறைப்பு
சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரப்போகுது இல்லை? அதனால இப்படி விலை குறையத்தான் செய்யும். ஆனாலும் இன்னும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தா நல்லாதான் இருக்கும் என்று வாகன ஓட்டிகள் ஆசைப்படுகிறார்கள்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications