சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ. 72.36 க்கும், டீசல் விலை 7 காசுகள் குறைந்து ரூ. 67.31-க்கும் விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

Petrol and diesel prices continue to decline

இந்தநிலையில், அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது. இந்தநிலையில், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று பேரலுக்கு 3.69 டாலர் அதிகரித்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ. 72.36 க்கும், டீசல் விலை 7 காசுகள் குறைந்து ரூ. 67.31-க்கும் விற்பனையாகிறது.

English summary
The price of petrol in Chennai has been reduced by 5 paise to Rs. 72.36, Diesel prices fell by 7 paise to Selling up Rs. 67.31.according to price notification issued by state fuel retailers,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X