24 நாட்களுக்கு பின் மாற்றம்.. பெட்ரோல், டீசல் விலையில் 16 காசுகள் குறைப்பு.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: 24 நாட்களாக மாற்றமில்லாமல் இருந்து வந்த பெட்ரோல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. மக்கள் கடுமையாக அவதிப்படும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சமயங்களில் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து கடந்த 24 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்படி பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படடவில்லை.
இந்த நிலையில் 24 நாட்களாக மாற்றமில்லாமல் இருந்து வந்த பெட்ரோல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதாக தெரிகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை 92.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.29 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.29 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 87.08 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.27ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 93.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.29 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications