தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் 12 காசுகள் சரிவு.. சென்னையில் விலை நிலவரம் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 12 காசுகள் குறைந்தது. சென்னையில் பெட்ரோல் 98.96 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் டீசல் 93.26 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை சரிவை சந்தித்து வருகிறது. முன்னதாக தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மாநில அரசின் வரி குறைப்பால் 3 ரூபாய் குறைந்தது. இதனால் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் சென்றது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலையும் உலக அளவில் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் கடந்த ஒன்றரை மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எண்ணெய் நிறுவனங்களும் கடந்த ஒன்றரை மாதமாக விலையை உயர்த்தாமல் தொடர்ந்து அவ்வப்போது விலையை குறைத்து வருகிறது.
இந்தியாவில் கடைசியாக பெட்ரோல் டீசல் விலை ஜூலை 17ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்பின் பெட்ரோல் விலை உயர்த்தப்படவே இல்லை. இடையில் பெட்ரோல் விலை இடையில் 20 பைசா குறைக்கப்பட்டது. டீசல் விலையும் 4 முறை 20 பைசாவாக குறைக்கப்பட்டு 80 பைசா வரை சரிவை சந்தித்தத்து. கடந்த ஒன்றரை மாதத்தில் டீசல் விலை மட்டும் 1 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 12 காசுகள் குறைந்தது. சென்னையில் பெட்ரோல் 98.96 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் டீசல் 93.26 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
தற்போது டெல்லியில் பெட்ரோல் 101.52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 88.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 104.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 94.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மும்பையில் பெட்ரோல் விலை 107.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 95.89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
-
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications