தொடர்ந்து 6 நாட்களாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. இன்று புதிய உச்சம் தொட்டது.. விலை என்ன?
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஒரே அளவில் இருந்து வந்தது.

ஆனால் தேர்தல் முடிந்த பின் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 50 காசுகள், 60 காசுகள் என்ற அளவில் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 0.53 காசுகள் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.3.50 உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் கடந்த 6 நாட்களில் டீசல் ரூ.3.57 விலை அதிகரித்துள்ளது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.90-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.95.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்தில்தான் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இருப்பினும் கச்சா எண்ணெய் தேவை அதிகம் இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி நிலையில் அது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதையடுத்து உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பெட்ரோல், டீசல் விலை கடும் விவாதத்தை ஏற்படுத்தியதால் விலை ஏற்றப்படாமல் இருந்தது. இப்போது தேர்தல் முடிந்து மீண்டும் விலை ஏற்றப்பட்டுள்ளது.
மற்ற நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை,
கொல்கத்தா
பெட்ரோல்- Rs 105.67 per litre
டீசல் - Rs 92.79 per litre
போபால்
பெட்ரோல்- Rs 110.23 per litre
டீசல் - Rs 93.87 per litre
ஹைதராபாத்
பெட்ரோல்- Rs 111.20 per litre
டீசல் - Rs 98.62 per litre
மும்பை
பெட்ரோல்- Rs 112.98 per litre
டீசல் - Rs 97.14 per litre
டெல்லி
பெட்ரோல்- Rs 98.41 p per litre
டீசல் - Rs 90.67 per litre
பெங்களூர்
பெட்ரோல்- Rs 104.58 per litre
டீசல் - Rs 88.01 per litre
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications