ராக்கெட் வேகத்தில் பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் உச்சம் தொட்டது.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 33 காசுகள் அதிகரித்தது.
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.105.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டர் ரூ. 101.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 5 மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 15.74 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது. டீசல் விலை 15 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது. 164 நாட்களில் 66 முறையாக டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது. 70வது முறையாக பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுள்ளது. தினமும் 30 பைசா, 20 பைசா என்ற அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுக்கொண்டே வருகிறது.

பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டி உள்ளது. மும்பை 115 ருபாய் பெட்ரோல் விலை நெருங்கி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கே விலை ஏற்றப்பட்டு வருகிறது. .
தற்போது டெல்லியில் பெட்ரோல் 108.39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 97.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 109.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 101.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 106.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 102.89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 114.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 105.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கும் பெரு நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது.












Click it and Unblock the Notifications