குட்நியூஸ்.. எல்பிஜி சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைப்பு.. பெட்ரோல், டீசல் விலையும் 60 பைசா குறைப்பு!
சென்னை: எல்பிஜி சிலிண்டர் விலையில் இன்று 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல், டீசல் விலையிலும் 60 பைசா குறைந்தது.
Recommended Video

5 மாநில சட்டசபை தேர்தல் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கு வங்கம்,அசாமில் முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம் செய்யப்படவில்லை.
தொடர்ந்து கடந்த 31 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஏற்றமும் செய்யப்படவில்லை. மாறாக இடையில் ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை தலா 60 பைசா குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று 60 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் பெட்ரோல் விலை 91 33 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 95.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 80.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 85.40ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 84.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

விலை குறைப்பு
பெங்களூரில் பெட்ரோல் விலை 93.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 96.59 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது தேர்தலை முன்னிட்டு விலை குறைக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்
அதேபோல் இன்று எல்பிஜி சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைந்தது . புதிய எல்பிஜி விலை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. சென்னையில் 835 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் இன்று 825 ரூபாயாக குறைந்துள்ளது.

எதிர்ப்பு
டெல்லியில் எல்பிஜி சிலிண்டர் விலை 819 ரூபாயில் இருந்து 809 ரூபாயாக குறைந்து உள்ளது. சேலத்தில் 853 ரூபாயில் இருந்து 843 ரூபாயாக சிலிண்டர் விலை குறைந்துள்ளது . பொது மக்கள் இடையே எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications