சேஞ்சே இல்லை.. 28 நாளாகியும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. இன்றும் 1 லிட்டர் ரூ.110.85
இன்று 28வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விற்பனையாகிறது
சென்னை: சென்னையில் 28வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதனிடையே, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை..

உக்ரைன் - ரஷ்யா
எனினும், சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வந்தது. போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டு எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது..

பெட்ரோல் - டீசல்
அந்த வகையில், கடந்த 25 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் தொடர்ந்து 28வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி - சென்னை
அதன்படி, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. அதேபோல, டெல்லி , மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற முக்கிய மாநிலங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் விலை இன்றும் தொடர்கின்றது. அதன்படி டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 105.41 காசுகளாகவும், கொல்காத்தாவில் ரூபாய் 115.12 காசுகளாகவும், விற்பனையாகிறது.

டெல்லி
மும்பையில் ரூபாய் 120.51 காசுகளாகவும், சென்னையில் ரூபாய் 110.95 காசுகளாகவும் விலை இருந்து வருகிறது.... பெரும்பாலான இந்திய வடமாநிலங்களில் அந்தந்த விலையே இன்றும் தொடர்கிறது.. எனினும், வாகன ஓட்டிகள் இந்த விலையால் அதிருப்தியில் தான் உள்ளனர்.. இன்றைய தினம் பெட்ரோல், மற்றும் டீசல் விலை எப்படி உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்:
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications