இன்றும் மாற்றமேயில்லை.. 29 வது நாளாக பெட்ரோல், டீசல் அதே விலையில் விற்பனை.. மக்கள் கடும் வேதனை
இன்று 29வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விற்பனையாகிறது
சென்னை: சென்னையில் 29வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கு விற்பனையாகிறது..
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதனிடையே, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை..

உக்ரைன் - ரஷ்யா
எனினும், சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வந்தது. போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டு எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது..

அதே விலை
அந்த வகையில், கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் தொடர்ந்து 29வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி - சென்னை
அதன்படி, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. அதேபோல, டெல்லி , மும்பை, கொல்காத்தா, சென்னை போன்ற முக்கிய மாநிலங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் விலை இன்றும் தொடர்கின்றது. அதன்படி டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 105.41 காசுகளாகவும், கொல்காத்தாவில் ரூபாய் 115.12 காசுகளாகவும், விற்பனையாகிறது.

ஆர்ப்பாட்டம்
மும்பையில் ரூபாய் 120.51 காசுகளாகவும், சென்னையில் ரூபாய் 110.95 காசுகளாகவும் விலை இருந்து வருகிறது.... பெரும்பாலான இந்திய வடமாநிலங்களில் அந்தந்த விலையே இன்றும் தொடர்கிறது.. எனினும், வாகன ஓட்டிகள் இந்த விலையால் அதிருப்தியில் தான் உள்ளனர்.. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி, பல கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை செய்துவிட்டன.. ஆனாலும், கிட்டத்தட்ட ஒரு மாத நெருங்கி வரும் நிலையில், விலை குறையாமல் உள்ளது கடுமையான அதிர்ச்சியை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications