ஆஹா.. 12 நாட்களில் குறைந்த பெட்ரோல் விலை இவ்வளவா? எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான்!
சென்னை: பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களில் ரூபாய் 3.24 அளவுக்கு குறைந்துள்ளது. என்ன.. ஏதேனும் நாட்டில் அதிசயம் நடந்து விட்டதா என்று நீங்கள் நினைக்கக் கூடும். இது அதிசயம் அல்ல தேர்தல் அரசியல்.
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை 19 நாட்களுக்கு மாற்றப்படாமலேயே இருந்தது. ஆயில் நிறுவனங்களை அரசு கட்டுப்படுத்தவில்லை என்று சொன்னாலும் இதுதான் யதார்த்தம்.
எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தின.

கொந்தளிப்பு
பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. எதிர்ப்புகளால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை, தலா ரூ.2.50 குறைத்தது. இருப்பினும் அடுத்த வாரத்திலேயே அதைவிட உயர்ந்தன எரிபொருள் விலைகள்.

சென்னையில் பெட்ரோல் விலை
இந்த நிலையில்தான், கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று, சென்னையில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 32 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.82.86 ஆகவும், டீசல் 21 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.78.08 ஆகவும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

12 நாட்களாக குறைந்த பெட்ரோல் விலை
கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.24 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ரூ.1.96 குறைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில், ஒரே ஒரு நாள் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

தேர்தல்
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோராம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநில தேர்தல்கள் நவம்பரில் நடைபெறுவதால்தான், விலை ஏற்றப்படாமல் உள்ளது என்பதே அரசியல் விமர்சகர்கள் பார்வையாக உள்ளது.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications