மத்திய அரசை அடுத்து பெட்ரோல், டீசல் வரியை குறைத்த பல மாநில அரசுகள்.. கர்நாடகாவில் செம சரிவு- பின்னணி
சென்னை: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் விலையில் வாட் வரியை குறைத்துள்ளது.
Recommended Video
நாடு முழுக்க கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல் டீசல் விலை வேகமாக உயர்ந்து வந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாயை தாண்டி விற்க தொடங்கியது. மும்பையிலும் பெட்ரோல் விலை 120 ரூபாயை லிட்டருக்கு தொட்டது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 107 ரூபாய் வரை பல மாவட்டங்களில் விற்றது. அதேபோல் டீசல் விலை பல மாநிலங்களில் 105 ரூபாயை தொட்டது.
மும்பையில் டீசல் விலை 102 ரூபாய் தாண்டியது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். முக்கியமாக அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மத்திய அரசு கலால் வரியை குறைத்த நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் விலையில் வாட் வரியை குறைத்துள்ளது.
அசாம், திரிபுரா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி ரூ 7 குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமாக மத்திய, மாநில அரசு வரிகள் சேர்த்து 13 ரூபாய் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 113.93 ரூபாயில் இருந்து குறைந்து 100.63 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. டீசல் விலை லிட்டருக்கு 104.50 ரூபாயில் இருந்து குறைந்து 85.03 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ₹2 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பெட்ரோல் விலை மொத்தமாக 7 ரூபாயும், டீசல் விலை 9 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பெட்ரோல் மீதான மாநில வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
பெருநகரங்களில் பெட்ரோல் டீசல் விலை பின்வருமாறு

சென்னை
- பெட்ரோல்- Rs 101.40 per litre
- டீசல் - Rs 91.43 per litre

மும்பை
- பெட்ரோல்- Rs 109.98 per litre
- டீசல் - Rs 94.14 per litre

டெல்லி
- பெட்ரோல்- Rs 103.97 per litre
- டீசல் - Rs 86.67 per litre

கொல்கத்தா
- பெட்ரோல்- Rs 104.67 per litre
- டீசல் - Rs 89.79 per litre

போபால்
- பெட்ரோல்- Rs 107.23 per litre
- டீசல் - Rs 90.87 per litre

ஹைதராபாத்
- பெட்ரோல்- Rs 108.20 per litre
- டீசல் - Rs 94.62 per litre

பெங்களூர்
- பெட்ரோல்- Rs 100.58 per litre
- டீசல் - Rs 85.01 per litre
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications