தமிழகத்தில் வரி குறைப்பால் பெட்ரோல் விலை குறைந்தது.. சென்னையில் பெட்ரோல் விலை எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரி குறைப்பால் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 99.47 க்கு விற்பனையாகிறது.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த விலைகளை அன்றாடம் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

Petrol is being sold in Chennai for Rs 99.47/ litre

இதனால் தினந்தோறும் இதன் விலையானது புதிய உச்சத்தை தொட்ட வண்ணம் உள்ளது. இந்தியாவில் பெட்ரோலின் விலையானது ரூ 100 ஐ தாண்டியிருந்தது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 5, டீசல் விலை ரூ 3 குறைக்கப்படும். சமையல் எரிவாயுக்கான மானியம் ரூ 100 வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதிமுக ஆர்ப்பாட்டமும் நடத்தியது. அதில் "விடியல்கார அண்ணாச்சி, வாக்குறுதிகள் என்னாச்சு" என கோஷமிட்டிருந்தன.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பெட்ரோல் டீசல் மீதான வரியில் ஒன்றிய அரசு அதிக பங்கை எடுத்துக் கொள்கிறது. எனவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தற்போது சாத்தியமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்றைய தினம் தமிழகத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பெட்ரோல் டீசல் விலை குறித்து அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அரசுக்கு ரூ 1160 கோடி நிதி இழப்பு ஏற்படும் என்ற போதிலும் பெட்ரோல் மீதான வரியை ரூ 3 குறைக்க முதல்வர் உத்தரவிட்டதால் அந்த வரியை குறைப்பதாக நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.

இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என நிதி துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அதன் படி நள்ளிரவு முதல் தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ 100- க்கு கீழ் வந்துள்ளது. விலை குறைப்புக்கு பின்னர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 99.47 க்கு விற்பனையாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+