பெட்ரோல் விலை 21 காசுகள்... டீசல் விலை 23 காசுகள் குறைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.01 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.91 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்து, டீசல் விலை 23 காசுகள் குறைத்து விற்பனையாகிறது.

Petrol price down 21 paise ... Diesel price cuts 23 paise

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது. கச்சா எண்ணெயின் விலை 50 டாலருக்கும் கீழே சென்றது. இதனால் எரிப்பொருட்களின் விலையும் இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று பேரலுக்கு 0.55 டாலர் அதிகரித்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.01 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.91 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+