கிரிக்கெட் வீரர்களுக்கு பதில் சதமடித்த பெட்ரோல்.. காரணம் மத்திய அரசின் வரி கொள்ளை..ப சிதம்பரம் சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக கிரிக்கெட் இறுதிப்போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என்று விமர்சித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம், இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் இன்னலை எதிர் கொண்டுள்ளனர்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

இந்தியாவில் ஏற்கனவே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துவிட்டது. இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் கடலூர், விழுப்புரம், நாகை தேனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ 100ஐ தாண்டியுள்ளது. தலைநகர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.19க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீரர்களுக்குப் பதில் சதமடித்த பெட்ரோல் விலை

வீரர்களுக்குப் பதில் சதமடித்த பெட்ரோல் விலை

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது! தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 ஐத் தாண்டியது

வரிக் கொள்ளை

வரிக் கொள்ளை

கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐத் தாண்டவில்லை! இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை!

சிதம்பரம் சாடல்

சிதம்பரம் சாடல்

இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது. திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். நாட்டில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+