PF-ல் மத்திய அரசு புது ரூல்ஸ்.. ரூ.25000 வரை சம்பளம்.. 51 லட்சம் பேருக்கா? யார் யாருக்கெல்லாம் பயன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சம்பளம் வாங்கும்போது PF என்று ஒரு தொகை பிடிக்கப்படுகிறதே.. அது எதற்காக என்று பலருக்கும் முழுமையாக தெரியாது. ஆனால், அந்தப் பணம் எதிர்காலத்துக்கான சேமிப்பு., வேலை பார்க்கும் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்து, ஓய்வுக்காலத்தில் நிதி சிக்கல் இல்லாமல் இருக்க உதவும் திட்டம்தான் இந்த பிஎப். இப்போது அந்த பிஎப் விஷயத்தில் மத்திய அரசு ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது என்ன தெரியுமா?

இதுவரை கட்டாய பிஎப் பாதுகாப்புக்குள் வராத ஒரு பெரிய சம்பளப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களும் இனி இந்த சமூகப் பாதுகாப்பு வட்டத்துக்குள் வர உள்ளனர்.

PF EPFO Salary

மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், EPFO-வின் கட்டாய coverage-க்கான ஊதிய உச்சவரம்பை மாதம் ரூ.15000-லிருந்து ரூ.25000 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரம்பு செப்டம்பர் 17, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை ரூ.15,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்களுக்குத்தான் பிஎப் திட்டத்தில் சேருவது கட்டாயமாக இருந்தது. ரூ.15,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு அது கட்டாயம் கிடையாது. நிறுவனத்தின் நடைமுறை மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அவர்கள் பிஎப் திட்டத்தில் சேரலாம்.

இனி ரூ.15 ஆயிரம் முதல் 25000 ரூபாய் 0வரை சம்பளம் பெறும் தகுதியுள்ள புதிய ஊழியர்களும் கட்டாயமாக பிஎப் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இதன் மூலம் கூடுதலாக 51 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிஎப் சேமிப்பு

அப்படியென்றால், இவர்களுக்கு என்னென்ன பயன் கிடைக்கும் தெரியுமா? முதலில் பிஎப் சேமிப்பு. ஊழியர் செலுத்தும் தொகையுடன் நிறுவனமும் தனது பங்களிப்பைச் செய்யும். இதனால் வேலை செய்யும் ஆண்டுகளில் தொடர்ந்து பணம் சேர்ந்து, பிறகு தேவையான நேரத்தில் உதவும்.

அத்துடன் ஓய்வூதியத் திட்டமும், ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டமும் உள்ளன. எனவே புதிதாக பிஎப் திட்டத்தின் கீழ் வரும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு, விதிமுறைகளின்படி ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பாதுகாப்பும் கிடைக்கும். சம்பள வரம்பு உயர்வால் காப்பீட்டுத் தொகை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10.5 லட்சம் வரை செல்ல வாய்ப்புள்ளதாக ஒரு கணக்கீடு சொல்கிறது. ஆனால், ரூ.10.5 லட்சம் என்பது உறுதி செய்யப்பட்ட புதிய காப்பீட்டு வரம்பு அல்ல.

அதேநேரம் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ரூ.25000 சம்பளம் வாங்கினால், அந்த ரூ.25,000 முழுவதற்கும் பிஎப் பிடித்தம் செய்யப்படும் என்று அர்த்தமில்லை. எவ்வளவு தொகை பிடிக்கப்படும் என்பது சம்பளத்தில் அடிப்படை ஊதியமாக கணக்கிடப்படும் தொகை மற்றும் பிஎப் விதிமுறைகளைப் பொறுத்தது. சிலருக்கு இதனால் கையில் கிடைக்கும் சம்பளம் குறையலாம்... ஆனால் அந்தத் தொகை பிஎப் சேமிப்பாக சேரும்.

குறைந்தபட்ச ஊதியம்

இந்த சம்பள வரம்பு 2014-ம் ஆண்டு செப்டம்பரில் ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு 12 வருஷம் கழித்து இப்போது ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் சம்பளம் உயர்ந்ததுடன், பல இடங்களில் குறைந்தபட்ச ஊதியமும் பழைய வரம்பை நெருங்கியதால் இந்த மாற்றம் தேவைப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு சுமார் 7.98 கோடி பேர் பிஎப்-ல் தொடர்ந்து பணம் செலுத்தி வருகிறார்கள். 7.68 லட்சம் நிறுவனங்கள் பங்களிப்பை தந்து கொண்டிருக்கின்றன.. கிட்டத்தட்ட 82 லட்சம் பேர் பென்ஷன் பெற்று வருகின்றனர். புதிய மாற்றத்துக்காக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.11,339 கோடி கூடுதல் செலவாகும் என்றும், 5 ஆண்டுகளில் ரூ.56,696 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில், ரூ.15 ஆயிரம் என்ற பழைய பிஎப் சம்பள வரம்பு ரூ.25000 ஆக உயர்ந்துள்ளதால், கூடுதலாக 51 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் PF, ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்குள் வர உள்ளனர்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+