உயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க!
மகன் மனோஜ் பாண்டியனுக்காக பிஎச் பாண்டியன் பிரச்சாரம் செய்தார்.
Recommended Video

சென்னை: எல்லாம் ஒரு நாள் போகத்தானே போறோம்.. இப்படி கூட ஓட்டு கேட்பாங்களா?ன்னு நெல்லை தொகுதி மக்கள் பேசி கொள்கிறார்கள்.
இவ்வளவு காலம் கட்சியில் இருந்த செல்வாக்கை வைத்து இந்த முறை பெரிய புள்ளிகள் எல்லாம் வாரிசுகளுக்கு சீட் வாங்கிவிட்டார்கள். இதனால் இந்த விஷயம் அதிமுக, திமுக கட்சிகளுக்குள் இன்னமும் புகைந்து கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த பெரிய புள்ளிகள் மகன்களை ஜெயிக்க வைக்கும் அடுத்த கட்ட வேலையில் இறங்கிவிட்டனர்.

நிறைவேற்றுவேன்
ஒரு பக்கம் துரைமுருகன், "என் மகன் செய்றானோ இல்லையோ, உயிரை தந்தாவது உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவான் இந்த துரைமுருகன்" என்கிறார். வாக்குறுதியை துரைமுருகன் நிறைவேற்றுவதற்கு மகன் எதற்கு போட்டியிடவேண்டும் என்று புரியவில்லை.

சபாநாயகர்
அதேபோல, திருநெல்வேலி பக்கமும் ஒருவர் இப்படித்தான் பேசி வருகிறார். அவர் வேறு யாருமில்லை.. மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவரும், எம்ஜிஆர் காலத்து சபாநாயகருமான பிஹெச்.பாண்டியன்தான். இவரது மகன் மனோஜ் பாண்டியன் அதிமுக சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.

உடம்பு சரியில்லை
அந்த பகுதியில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும் பி.ஹெச்.பாண்டியன், "45 வருஷத்துக்கும் மேலா இந்த தொகுதியில் நான் அறிமுகமானவன். எனக்கு இப்போ உடம்பு சரியில்லை.. இதனால் 2 வருஷமாக வெளியில் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறேன். தேர்தல் முடிவு வரும்வரை நான் உயிரோடு இருப்பேனா என்று எனக்கு தெரியாது. அதனால் என்னை மனதில் வைத்தாவது எனது மகன் மனோஜ் பாண்டியனை வெற்றி பெற செய்யுங்கள்" என்றார்.

இப்படியா பேசறது?
ஒரு பக்கம் இவரது பேச்சை கேட்டு தொகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம் "எல்லாரும் ஒருநாள் போகத்தானே போறோம்.. இதில் என்ன இருக்கு.. இப்படி பேசியா ஓட்டு கேட்கிறது" என்று சொல்கிறார்களாம்!

அறுவடை
ஆக மொத்தம் அன்று ஓடி ஓடி தங்கள் கட்சிக்காக உழைத்ததை எல்லாம் இன்று தங்கள் மகன்களுக்காக அறுவடை செய்ய துவங்கிவிட்டார்கள் பெரிய தலைகள்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications