சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரையை கடக்கவுள்ள பேய்ட்டி.. கொப்பளிக்கும் வங்கக் கடல்.. மிதமான மழை உண்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    பேய்ட்டி புயல் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம்

    சென்னை: பேய்ட்டி புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் வங்கக் கடல் கடும் கொந்தளிப்பாக உள்ளது.

    வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது சற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இதையடுத்து அது புயலாக மாற வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. அதன்படி புயலாக மாறியது. அதற்கு பேய்ட்டி என தாய்லாந்து பெயரிட்டது. இந்நிலையில் அந்த புயல் ஆந்திரா அருகே மசூலிப்பட்டினத்துக்கும்-காக்கிநாடாவுக்கும் இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இதனால் வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வானம் மேக மூட்டம்

    வானம் மேக மூட்டம்

    இதன் காரணமாக வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டு இருப்பதால் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும்.

    பெரிய மழை

    பெரிய மழை

    புயல் நகர்ந்து செல்லும்போது சாரல் மழையோ அல்லது மிகுதியான காற்றோ வீசலாம். தமிழகத்தை பொறுத்தவரை பெரிய மழைக்கு வாய்ப்பு எதுவும் இல்லை.

    மீனவர்கள்

    மீனவர்கள்

    ‘பேய்ட்டி' புயல் நகர்ந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் காலை முதலே குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவியது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புயல் காரணமாக சென்னையில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த புயல் காரணமாக 5-ஆவது நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    கடலோர மாவட்டங்களுக்கு

    கடலோர மாவட்டங்களுக்கு

    பேய்ட்டி புயல் கரையை கடக்கும் நேரத்தில் கனமழை பெய்யலாம் என்பதால் கடலோர மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இருக்கும். இந்த புயல் காரணமாக ஓடிஸா மாநிலத்துக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    English summary
    Phethai Strom is likely to cross the region between Kakinada and Visakapatnam today noon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X