Phethai Storm: பேய்ட்டி புயல் சென்னையை தாக்குமா? வானிலை மையம் என்ன சொல்கிறது?
பேய்ட்டி புயல் ஆந்திராவிற்கும் சென்னைக்கும் இடையில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: பேய்ட்டி புயல் ஆந்திராவிற்கும் சென்னைக்கும் இடையில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
பேய்ட்டி புயல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகத்திற்கும் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். கஜா புயலை தொடர்ந்து பேய்ட்டி புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பெரிதாக உருவானது
ஒருவாரம் முன் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. கடந்த வாரம் உருவான இந்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்தது. புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி பின் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

எங்கு கடக்கும்
சென்னைக்கும் ஆந்திராவிற்கும் இடையே இந்த புயல் கரையை கடக்க உள்ளது. இதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஆனால் சரியாக எப்போது கடக்கும், எந்த வேகத்தில் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் இன்னும் தெரிவிக்கவில்லை.

சென்னையை தாக்குமா
இந்த புயல் சென்னையை தாக்குமா? தாக்காதா? என்று இன்னும் முழுதாக விளக்கம் அளிக்கப்படவில்லை. புயலின் திசை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். சென்னைக்கு எவ்வளவு அருகில் புயல் கரையை கடக்கிறதோ அந்த அளவிற்கு புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கு மழை
இந்த புயலால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்றே தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. நாளையில் இருந்து டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் கண்டிப்பாக இன்றும் நாளையும் மழை பெய்யும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications