PHH, AAY கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இனி பொருட்களுக்கு பதிலாக நேரடியாக கைக்கு வரும் பணம்
சென்னை: இந்தியாவின் பொது விநியோக திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது... குறிப்பாக ரேஷன் கடைகள் வழியாக வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பதிலாக, புதிய முயற்சியை மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுதான் ரேஷன்தாரர்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.. இதனை சுருக்கமாக பார்ப்போம்..!!
மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி மக்கள், தற்போது நேரடியாகவே பயன் பெற்று வருகின்றனர்.

எனினும் இந்த திட்டத்தில் முறைகேடுகள் ஆங்காங்கே நடந்தபடியே உள்ளது.. அதேபோல போலி ரேஷன் கார்டுகள் நடமாட்டமும் இருக்கத்தான் செய்கிறது.. இவைகளை எல்லாம் ஒழித்துக்கட்டி, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் போய் சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது..
PHH, AAY கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்
குறிப்பாக கார் வைத்திருப்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் போன்ற தகுதியற்றவர்கள் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்துவதை தடுத்து, உண்மையான ஏழைகளுக்கு மட்டும் பலன் கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயல்கிறது.
அதற்காகத்தான் சூப்பரான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, இ-ரூபி எனப்படும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.. இதற்காக மத்திய உணவு அமைச்சகம் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புதிய விதிமுறைகளை உருவாக்கி உள்ளது.
மத்திய அரசின் சர்ப்ரைஸ்
இந்த திட்டம் எப்படி செயல்படும்? இந்த முறையின்படி பயனாளிகளின் செல்போன் நம்பருக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட மதிப்பிலான டிஜிட்டல் டோக்கன் அல்லது கியூஆர் கோடு அனுப்பி வைக்கப்படும். இது பணமாக இருக்காது, மாறாக குறிப்பிட்ட அளவு அரிசி அல்லது கோதுமையை பெறுவதற்கான அடையாளமாக இருக்கும்.
இந்த வவுச்சர் பயனாளியின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதால் இதை மற்றவர்கள் யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. பயனாளி ரேஷன் கடைக்கு சென்று தனது செல்போனுக்கு வந்த மெசேஜ்ஜை காட்டி, கைரேகை அல்லது ஓடிபி மூலம் சரிபார்த்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம்
இந்த முறையில் பயனாளிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை ரேஷன் கடைகளில் அல்லது வெளி சந்தையில் வாங்கி கொள்ளும் வசதியும் இருக்கும்.. சில பகுதிகளில் இந்த வவுச்சரை பணமாக மாற்றி வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படலாம்...
இந்த திட்டம் ஏற்கனவே சண்டிகர் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் குஜராத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் இது தொடங்கப்பட உள்ளது. அங்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது..
ரேஷன் அட்டைதாரர்கள்
இருந்தாலும், இந்த புதிய திட்டத்திற்கு ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம், இந்த முறை அமலுக்கு வந்தால் ரேஷன் கடை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்தை மக்கள் உணவு தேவைகளுக்கு பயன்படுத்தாமல் மது போன்ற தேவையற்ற செலவுகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கிறார்கள்..
டிஜிட்டல் தீர்வு
எனினும், அரசு தரப்பில் இந்த முறை வந்தால் பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும்.. மக்களுக்கு தரமான பொருட்கள் சரியான அளவில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.. இந்த புதிய மாற்றத்தின் மூலம் ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுருக்கமாக சொன்னால், இதுவரை இருந்து வந்த எடை குறைவு மற்றும் தரமற்ற பொருட்கள் போன்ற புகார்களுக்கு இந்த டிஜிட்டல் முறை ஒரு தீர்வாக அமையும் என்று மத்திய அரசு பெரிதாய் நம்புகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications