கத்தியை காட்டி மிரட்டிய செல்போன் கொள்ளையன்.. கூச்சலிட்ட 23 வயது இளைஞர்.. சென்னையில் கொடூர கொலை!
சென்னை பொழிச்சலூரில் செல்போன் பறிப்பவர்கள் கத்தியால் குத்தியதில் 23 வயது இளைஞர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னை பொழிச்சலூரில் செல்போன் பறிப்பவர்கள் கத்தியால் குத்தியதில் 23 வயது இளைஞர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருநகரங்களில் சமீப காலங்களில் செல்போன் திருட்டு, நகை திருட்டு அதிகமாகிக் கொண்டே வருகிறது. முக்கியமாக தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரில் செயின், செல்போன் ஸ்னாட்ச்சிங் வகை திருட்டு மிக மிக அதிகமாகிவிட்டது.
இரவு அல்லது அதிகாலை நேரங்களில் வேகமாக பைக்கில் செல்லும் நபர்கள் போன் பேசிக்கொண்டு செல்பவர்களின் போன்களை பிடுங்கி செல்வது, நகைகளை பிடுங்கி செல்வது போய் தற்போது கத்தி வைத்து மிரட்டி போன்களை பறிப்பது கூட நடந்து வருகிறது.

சென்னையில் ஒருநாள்
அந்த வகையில் சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அசம்பாவிதத்தில் முடிந்து இருக்கிறது. சென்னை பொழிச்சலூரில் சமீப நாட்களில் வழிப்பறி கொள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது. இந்த நிலையில் நேற்று பொழிச்சலூரில் ஓட்டல் ஊழியர் 23 வயது நிரம்பிய ராஜகண்ணன் என்பவர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

என்ன நடந்தது
பொழிச்சலூரில் வெறும் 3 கிமீ தூரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு அவர் நடந்தபடி சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கே மர்ம வழிப்பறி கொள்ளையன் கத்தியை வைத்து ராஜகண்ணனை மிரட்டினார். செல்போனை தரும்படி கூறி வயிறில் கத்தியை வைத்து மிரட்டினார்.

ராஜகண்ணன் என்ன செய்தார்
இந்த நிலையில் செல்போனை தர மறுத்து ராஜகண்ணன் அந்த நபருடன் சண்டையிட்டார். பதற்றத்தில் ராஜகண்ணன் கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். சுமார் 11 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து செல்போனை தர மறுத்ததால் ஓட்டல் ஊழியர் ராஜகண்ணனை கொள்ளையன் கத்தியால் குத்திவிட்டு பைக்கில் மாயமானான்.

பலி
இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அதிகாலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பலியானார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications