நெட்டிசன் போட்ட "மீன்" போட்டோ.. பார்த்ததும் அரண்டு போன மக்கள்.. இது என்னங்க? சுவாரசிய பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த மீன் புகைப்படத்தை பார்த்து சக நெட்டிசன்கள் பலர் அரண்டு போய் இருக்கிறார்கள். அப்படி என்ன நடந்தது?

இன்ஸ்டாகிராம் செயலியில் rfedortsov_official_account என்ற பக்கம் இயங்கி வருகிறது. அந்த பக்கத்தில் இந்த விசித்திர மீனின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டா பக்கத்தில் பொதுவாக மீன்களின் புகைப்படங்கள் பலவற்றை அவர் பகிர்ந்து வருகிறார்.

தான் பிடிக்கும் வித்தியாசமான மீன்களை படம் பிடித்து அந்த யூசர் பதிவேற்றி வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக இவர் ஆறரை லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளார்.

விசித்திர மீன்

விசித்திர மீன்

இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு விசித்திர தோற்றம் கொண்ட மீனின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். குழி விழுந்த கண்கள் கொண்ட, பச்சை விழிகள் கொண்ட மீனின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.இதன் வால் ஒரு மாதிரி சுருங்கி போய், இதன் செவுள்கள் கிழிந்த இறக்கை போன்ற தோற்றம் கொண்டு இருந்தது. இதை பார்க்கவே அச்சமூட்டும் வகையில் இருந்தது.

ஏலியன் போன்ற மீன்

ஏலியன் போன்ற மீன்

அதோடு அந்த மீனின் உடலில் பல இடங்களில் விசித்திரமான குறியீடுகளும் இடம்பெற்று உள்ளன. இந்த விசித்திர குறியீடுகள் காரணமாக இந்த மீன் பார்க்க எதோ வேற்று கிரகத்து கடலில் மிதந்து வந்த ஏலியன் மீன் போல இருக்கிறது. இதையடுத்து நெட்டிசன்கள் பலர் இந்த மீனின் புகைப்படத்தை பார்த்து வியந்து போய் கமெண்ட் செய்துள்ளனர். இது கடலுக்கு அடியில் இருக்கும் ராட் பிஷ் வகையாக இருக்கலாம்.

என்ன மீன்?

என்ன மீன்?

அதன் தோலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர். இவர் திமிங்கலம் போல மிக அதிக ஆழத்தில் வாழ கூடியது. 650 முதல் 8,530 ஆழத்தில் கூட இவை வாழும். இவை பொதுவாக உடலில் அதிக நிறங்களை கொண்டு இருக்காது. அதேபோல் உள்ளே இருக்கும் அதிக அழுத்தத்தை தாங்கும் வகையில் இவை இருக்கும்.

ஏன் இந்த தோற்றம்

ஏன் இந்த தோற்றம்

அதன் காரணமாக இவை வித்தியாசமான தோற்றம் கொண்டு இருக்கும். ஆனால் மீன் வலையில் சிக்கும் அளவிற்கு இவை ஏன் மேலே வந்தது என்று தெரியவில்லை என்று சந்தேகமாக இன்னொரு கடலியல் ஆய்வாளர் இந்த புகைப்படத்திற்கு கீழ் கமெண்ட் செய்துள்ளார். இதே பக்கத்தில் மீன் ஒன்றின் வாயில் இருந்து உறுப்புகள் வெளியே வந்து தொங்கும் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. யாரும் இதை சாப்பிட்டுக்கொண்டு இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் என்று கேப்ஷன் போட்டு அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+