இது என்ன மினி ஏர்போர்ட் மாதிரி இருக்கே! கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்படித்தான் இருக்குமா? வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அசத்தலான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.,

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பேருந்து நிலையம் சமீபத்தில் பெய்த மழையில் வெள்ளத்தில் மூழ்கியது.

PHOTOS: Keelampakkam Bus Stand looks like a mini airport, see these pictures

இதன் காரணமாக அங்கே தண்ணீர் வெளியேற்றும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் வெளியேற்றுவதற்கான வெள்ள நீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த பணிகள் முடிந்த பின் அங்கே மீண்டும் புதிய சாலைகள் போடப்படும்.

அங்கே சாலைகள் போடப்பட்ட பின் மீண்டும் ஒருமுறை சோதனைகள் செய்யப்பட்ட பின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும். இந்த நிலையில்தான் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.

PHOTOS: Keelampakkam Bus Stand looks like a mini airport, see these pictures

கோயம்பேடு: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே உள்ள பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று. இப்படிப்பட்ட பேருந்து நிலையம் இருந்தும் கூட அதை சரியாக அரசு பராமரிக்கவில்லை. அதிலும் கடந்த 10 வருடங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது.

அரசு நேரடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதே இதற்கு காரணம். அதே சமயம் இது போன்ற பராமரிப்பு பணிகளை தனியாரிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் கேள்வி கேட்கும் பட்சத்தில், தனியார் அமைப்புகள் இதை சிறப்பாக செய்யும்.

சில வெளிநாடுகளில் இது போல தனியார் அமைப்புகளே ஒப்பந்தம் எடுத்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது.

PHOTOS: Keelampakkam Bus Stand looks like a mini airport, see these pictures

போட்டோ: இந்த நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அசத்தலான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதன் டாப் வியூ ஆங்கிள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சூரிய கதிர்கள் மாடலில் உள்ளே பேருந்து நிறுத்தங்கள்.

வெளியே சிவப்பு நிறத்தில் மாடலான நுழைவு வாயில். இன்னொரு பக்கம் நிழற்குடைகளுடன் புறநகர் பேருந்து நிறுத்தங்கள், பூங்கா அமைப்புகள், 50 ஆயிரம் வாகனங்களை நிறுத்த பார்க்கிங், அழகான நுழைவு வாயில், வெளியேறும் வாயில், புக்கிங் அலுவலகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

கிட்டத்தட்ட மினி ஏர்போர்ட் மாதிரியான தோற்றத்தில் அசத்தலாக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதன் புகைப்படங்கள்தான் தற்போது வெளியாகி உள்ளன.

பேருந்து நிலையம்: கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

PHOTOS: Keelampakkam Bus Stand looks like a mini airport, see these pictures

இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை.

பராமரிப்பு: இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது.

15 வருட பராமரிப்பு என்ற ரீதியில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதோடு மேலும் 15 வருடங்கள் இதை நீட்டிக்கவும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்தின் மொத்த பராமரிப்பை தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+