மாத உதவித் தொகையை உயர்த்திட கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.. அமைச்சர் பேச்சுவார்த்தையால் வாபஸ்
சென்னை: மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூ 1000 ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு 1500 ஆகவும் வழங்கப்படுகிறது. இதில் கடுமையாக பாதிப்பு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 200 உயர்த்தி மாதம் ரூ 1700 உதவித் தொகை வழங்க அரசாணை அண்மையில் வெளியானது.

புதுவையில் எவ்வளவு
இந்த நிலையில் புதுவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதந்தோறும் ரூ 3800, தெலுங்கானாவில் ரூ 3106 வழங்கப்படுகிறது. புதுவை, தெலுங்கானாவை போல் தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

மாற்றுத்திறனாளிகள்
அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.3000ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரூ.1700லிருந்து ரூ.5000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற இவர்களது கோரிக்கை
பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து இன்றைய தினம் சென்னையில் போராட்டம் நடத்துவதாக அச்சங்கம் அறிவித்திருந்தது.

போராட்டம்
இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில் மூலம் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர். குறிப்பாக கோயம்பேட்டில் மட்டும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எனினும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று 500- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதனால் வாலாஜா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்
இதையடுத்து சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் நிதி நிலையை பொருத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications