சிலிண்டருக்கு பதில் குழாய் மூலம் எரிவாயு.. தமிழகத்தில் மொத்தமாக மாறப்போகுது.. அதிகாரிகள் குட்நியூஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் 2.30 வீடுகளுக்கு குழாய் வழித் தடத்திலும் 2,625 சிஎன்ஜி முனையங்கள் மூலமாக வாகனங்களுக்கும், இயற்கை எரிவாயு விநியோகிக்க ஏழு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதில் 1.47 லட்சம் வீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 12,500 வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழித் தடம் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இன்று வீட்டில் பயன்படுத்தும் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹868.50 ஆக உள்ளது. இதேபோல் வணிக தளங்களில் பயன்படுத்தும் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை 1,906.00 ஆக இருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டரை பொறுத்தவரை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் மூலம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்னும் சிலிண்டர் மூலமே சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. அதேநேரம் பல்வேறு மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தக் குழாய் வழித்தடம் பூமிக்கடியில் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு நல்ல விஷயம் ஆகும்.. அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டரை விட விலை குறைவு ஆகும். தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி உள்ளது.
தற்போதைய நிலையில தமிழகம் முழுவதும் 2.30 வீடுகளுக்கு குழாய் வழித் தடத்திலும் 2,625 சிஎன்ஜி முனையங்கள் மூலமாக வாகனங்களுக்கும், இயற்கை எரிவாயு விநியோகிக்க ஏழு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதற்காக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுக வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல்என்ஜி எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயு முனனையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து எரிவாயு கொண்டுவரப்படுகிறது. இது வாகனங்களுக்கு சிஎன்ஜி எரிவாயுவாகவும், வீடுகளுக்கு பிஎன்ஜி எனப்படும் குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயுவாகவும் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிக்க பூமிக்கு அடியில் பைப்லைன் அமைக்கும் பணியில் எரிவாயு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் கேஸ் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று வாடிக்கையாளர்களை அணுகி குழாய் வழித் தடத்தில் எரிவாயு விநியோகம் செய்வதற்கு தற்போது விறுவிறுப்பாக பதிவு செய்து வருகின்றன.
இதுவரை 1.47 லட்சம் வீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12,500 வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இறக்குமதி செலவு குறைப்பு மற்றும் சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு (Liquefied petroleum gas) வழங்கும் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கடந்த சில வாரம் முன்பு அனுமதி அளித்தது. அதன்படி, தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் (Torrent Gas) செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் 466 கி.மீ நீளத்திற்கு டோரண்ட் கேஸ் நிறுவனம் குழாய் அமைக்க உள்ளதாகவும், இதன்படி, ரூ. 48 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த டோரண்ட் கேஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications