இவர்தான் எங்க வீட்டுக்காரரு.. நல்லா பாத்துக்குங்க.. நீங்க கோயல்ஜிக்கு கும்பிடு போடுங்க!

தமிழிசை சவுந்தராஜன் வீட்டிற்கு பியூஷ் கோயல் வருகை தந்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்திருந்த பியூஷ் கோயலுக்கு தடபுடலாக விருந்து வைத்திருக்கிறார் தமிழிசை சவுந்தராஜன்.

இழுபறியில் நீடித்து வந்த அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு நேற்று நல்லபடியாக முடிந்துவிட்டது. ஆனால் எவ்வளவோ பேசி பார்த்தும், கெஞ்சி பார்த்தும், எம்ஜிஆர் பாணியில் தேர்தலை சந்திக்கலாம் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் எத்தனையோ முறை சொல்லியும், அதிமுக மசியவில்லை.

உங்களுக்கு இவ்வளவுதான், பிடியுங்கள் என்று 5 சீட்டை தந்துவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்தபோது பாஜக தலைவர்கள் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லாமல் இருந்ததை தமிழக மக்கள் நன்றாகவே கவனித்தார்கள். இந்த 5 சீட்டை யாருக்குன்னு பிரிச்சு தர போறாங்களோ தெரியவில்லை.

உபசரிப்பு

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், பேச்சுவார்த்தை சம்பந்தமாக வந்திருந்த பியூஷ் கோயலை தனது வீட்டிற்கு அழைத்து சென்று உபசரிப்பு, விருந்து என ஏகப்பட்ட விஷயங்கள் நடந்திருக்கிறது. இது சம்பந்தமான போட்டோக்களை தமிழிசையே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஸ்மார்ட் லுக்

ஸ்மார்ட் லுக்

அந்த போட்டோவில், புகழ்பெற்ற மருத்துவரான கணவர் சவுந்தராஜனை பியூஷ் கோயலுக்கு தமிழிசை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது சஃபாரி, விபூதி என ஸ்மார்ட் லுக்கில் நின்றிருந்த டாக்டர் சவுந்தராஜன் கோயலுக்கு புன்முறுவலுடன் வணக்கம் சொல்கிறார்.

ஸ்வீட் சாப்பிடுகிறார்

ஸ்வீட் சாப்பிடுகிறார்

இன்னொரு போட்டோவில் வீட்டிற்குள் சோபாவில் உட்கார்ந்து கோயல் தட்டில் வைத்து ஏதோ சாப்பிடுகிறார். பக்கத்தில் சிபி ராதாகிருஷ்ணன் என்னவோ யோசனையில் அமர்ந்திருக்கிறார் (வெறும் 5 தானா? என்ற கவலையில் இருந்திருப்பாரோ.. இல்லாட்டி ஸ்வீட் வைக்கலையேன்னு கவலையில் ஆழ்ந்திருப்பாரோ) மற்றொரு போட்டோவில், தமிழிசை வீட்டின் ஆல்பம் ஒன்றினை பார்த்து கொண்டிருக்கிறார்.

காலண்டர்கள்

காலண்டர்கள்

இந்த போட்டோக்களை நெட்டிசன்கள் வெகுவாக ரசித்திருப்பதுடன், ஒவ்வொரு போட்டோவையும் உற்றுநோக்குகிறார்கள் என்பதும் கிளியராக தெரிகிறது. ஏனென்றால், இந்த போட்டோக்களின் பின்னால் நிறைய காலண்டர்கள் வீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது.

தேதி கிழிக்கவில்லை

தேதி கிழிக்கவில்லை

அதில் ஒன்றில் மோடியை விட தமிழிசையின் படம் பெரிதாகவே இருக்கிறது. ஆனால் எல்லா காலண்டர்களிலும் தேதி கிழிக்கப்படாமல் பழைய தேதிகளிலேயே உள்ளது. இதைகூட நெட்டிசன்கள் உற்றுநோக்கி, "வேலைக்கு ஆள் வச்சாச்சும் தேதியை கிழிக்க கூடாதா" என்று உரிமையோடும் பாசத்தோடும் கேட்டுள்ளனர்.

அதானே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+