பஞ்சாயத்து ஓவர்.. ஓபிஎஸ், தினகரனுக்கு கிரீன் சிக்னல்?.. பியூஷ் கோயல் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: என்.டி.ஏ. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை இணைக்க பச்சை கொடி காட்டி நீண்ட நாள் பஞ்சாயத்துக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளாதாகவும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்திருந்தார். பின்னர், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தல், கள நிலவரம், செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டது. அதில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
என்.டி.ஏ. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை இணைக்க பச்சை கொடி காட்டி நீண்ட நாள் பஞ்சாயத்துக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற்றுள்ளது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் பணி, மக்கள் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படுவோம். வேலைவாய்ப்பு, வளர்ச்சி இதுவே எங்களுடைய இலக்கு. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலோடு தன்னம்பிக்கையோ தேர்தலை எதிர்கொள்வோம். எப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் எதிர்கொள்ளப்படும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். ஊழல் திமுகவின் கூட்டணியை தோற்கடிப்போம் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications