இன்று சென்னை வரும் பாஜக டெல்லி புள்ளி.. கூட்டணி கட்சிகள், பாஜகவினருடன் சீட் பங்கீடு பற்றி ஆலோசனை
சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மீண்டும் தமிழகம் வருகை தருகிறார். இந்த பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த நிலையில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பாஜக தலைமை நியமனம் செய்தது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டிசம்பர் 24 ஆம் தேதி சென்னைக்கு வந்து பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பியூஷ் கோயில் சந்தித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, அதிமுக - பாஜக கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2 நாள் பயணமாக, இன்று சென்னை வரும் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அதிமுக, பாஜக, பாமகவிற்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைத்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் ஏற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்த்து வலிமைப்படுத்துவதற்காகவே பியூஷ் கோயல் இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications