தமிழகம் வரும் பியூஷ் கோயல்.. அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? முடிவாக வாய்ப்பு!
சென்னை: அதிமுக உடன் தொகுதி பங்கீடு, கூட்டணியை விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த, மத்திய அமைச்சரும், தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வரும் 21 ஆம் தேதி தமிழகம் வருகிறார். 3 நாட்கள் இங்கு தங்கி இருந்து கூட்டணி உடன்பாடு தொடர்பான பணிகளை கவனிக்க உள்ளார் பியூஷ் கோயல்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த நிலையில் இந்தக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பாஜக தலைமை நியமனம் செய்தது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டிசம்பர் 24 ஆம் தேதி சென்னைக்கு வந்து பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை பியூஷ் கோயில் சந்தித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, அதிமுக - பாஜக கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3 நாள் பயணமாக, வரும் 21 ஆம் தேதி சென்னை வரும் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அதிமுக, பாஜக, பாமகவிற்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைத்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் ஏற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்த்து வலிமைப்படுத்துவதற்காகவே பியூஷ் கோயல் தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இது பாஜக, அதிமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications