12ஆம் வகுப்பு பாஸா நீங்க! HCL டெக்னாலஜிஸில் வேலைவாய்ப்பு! பணியாற்றிக் கொண்டே உயர்கல்வி கற்கலாம்!
சென்னை: 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம்.
பணிபுரிந்து கொண்டே உயர்கல்வி கற்பதற்கும் கட்டணத்தை செலுத்தி HCL Technologies வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு

HCL Techbee
2021-2022 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம் பயிற்சியோடு கீழ்கண்ட பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee "Early Career Program"க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது.

7வது மாதம் முதல் ஊதியம்
இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு, தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies-ல் கீழ்க்கண்ட முழுநேர பணிவாய்ப்பை வழங்குகின்றது. Internship பயிற்சியின் போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூபாய் 10,000/- உதவித்தொகையை பெறலாம். பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்றாற்போல்)

உயர் கல்வி கற்கலாம்
HCL Technologies - ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பினை பெற்றுத் தருகின்றது. மேலும் அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது. மேலும் இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.

பள்ளிக்கல்வித்துறை
மாநிலம் முழுவதிலும் இந்த HCL "Techbee"திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு (தகுதியுள்ள மாணவர்களை ) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications