விஜய் மாநாடு: கட்சி விளம்பரத்துக்காக மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதா? சீறிய அறப்போர் இயக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் கட்சி விளம்பரத்துக்காக பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது சமூக விரோத செயல் என்றும், கட்சி தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது போல பொது மக்கள் பயணிக்கும் சாலைகளில் உங்கள் கட்சி விளம்பர பேனர் மற்றும் கொடி கம்பங்களை வைத்து மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் பாதுகாக்க சொல்லுங்கள் என்று அறப்போர் இயக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் விஜய் நடத்துகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த மாநாடு நடைபெறுகிறது. விக்கிரவாண்டி வி சாலையில் உள்ள 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக இந்த மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கான முழு ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட செய்யப்பட்டு விட்டன.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

தொண்டர்கள் இன்றே மாநாட்டிற்கு வருகை தர ஆயத்தமாகியுள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் மாநாட்டிற்கு கிளம்பிவிட்டனர். தமிழக அரசியல் வட்டாரத்திலும் விஜய் கட்சியின் இந்த மாநில மாநாடு பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சென்னை தாம்பரத்தில் இருந்து விஜயின் மாநாடு நடக்கும் இடமான விக்கிரவாண்டி வி சாலை வரை வழி நெடுக விஜயின் கட்சி பேனர்களை தொண்டர்கள் வைத்துள்ளனர்.

சாலையில் இருபுறமும் வழிநெடுகில் இந்த கட் அவுட் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விஜயை புகழ்ந்தும், பல்வேறு வாசகங்களுடன் விஜயை வரவேற்கும் விதமாக இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் நீதிமன்ற உத்தரவுப்படி பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியது. இந்த நிலையில் நெடுஞ்சாலை ஓரம் அனுமதியின்றி வைத்திருந்த கட் அவுட்கள், பேனர்கள் அகற்ற காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று மாநாட்டின் நுழைவுவாயில் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கட் அவுட்களை அகற்றுமாறு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவு படி, நெடுஞ்சாலைகளில் கட் அவுட்கள் வைக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த நிலையில் அறப்போர் இயக்கமும் உங்க கட்சி விளம்பரத்துக்காக மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் கூறியிருப்பதாவது:- கட்சி தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது போல பொது மக்கள் பயணிக்கும் சாலைகளில் உங்கள் கட்சி விளம்பர பேனர் மற்றும் கொடி கம்பங்களை வைத்து மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் பாதுகாக்க சொல்லுங்கள். சாலை மட்டும் நடைபாதைகளில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் நடுவது சட்ட விரோதம். உங்கள் கட்சி விளம்பரத்துக்காக பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது சமூக விரோத செயல். என்று கூறியுள்ளது.

முன்னதாக விஜயும் மாநாட்டில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பாதுகாப்பு முக்கியம் என்றும், மது அருந்திவிட்டு வரவேண்டாம் என்றும், தொண்டர்களை அழைத்து வரும் வாகனங்கள் மதுபான கடைகளில் நிறுத்தப்பட கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். மேலும், பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.

காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.

போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+