Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சிக்கு புது ரத்தம்! பிரேமலதாவின் அரசியல் கணக்கு! புதுப்பொலிவு பெறுமா தேமுதிக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் தேய்பிறையாகி கொண்டிருக்கும் தேமுதிகவுக்கு புது ரத்தம் பாய்ச்ச முடிவெடுத்துள்ளார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

மகன் விஜயபிரபாகரனுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுத்து அவரை தமிழகம் தழுவிய அளவில் டூர் அடிக்க வைக்க திட்டம் தயாராகி வருகிறது.

அநேகமாக இந்த செயல்திட்டங்கள் பொங்கல் பண்டிக்கைக்கு பிறகு ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தேமுதிக தலைவர்

தேமுதிக தலைவர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள், நிர்வாகிகளுடன் சந்திப்பு, நிர்வாகிகள் இல்ல விழாக்கள் என எதிலுமே உடல்நலம் காரணமாக அவரால் கலந்து கொள்ள இயலாத சூழல் இருக்கிறது. இதனால் மேற்கண்ட அத்தனை நிகழ்வுகளையும் பிரேமலதா விஜயகாந்த் தான் கவனித்து வருகிறார்.

மாவட்டச் செயலாளர்கள்

மாவட்டச் செயலாளர்கள்

தேமுதிக பொருளாளராக உள்ள பிரேமலதா விஜயகாந்த் விரைவில் அக்கட்சியின் செயல் தலைவராக வரவுள்ளாராம். அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட இதைத் தான் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினார்களாம். மேலும், கட்சியின் இளைஞரணியை விஜய பிரபாகரன் வசம் முழுமையாக கொடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்த நிர்வாகிகள் ஆர்வம் காட்டுவார்கள் எனவும் மாவட்டச் செயலாளர்கள் சிலர் பிரேமலதாவிடம் கோரிக்கை விடுத்தார்களாம்.

ஆலோசனை

ஆலோசனை

தேமுதிக இளைஞரணிச் செயலாளராக உள்ள தனது தம்பி எல்.கே.சுதீஷிடமிருந்து மகனுக்கு அந்தப் பதவியை கைமாற்றுவது குறித்து பிரேமலதா தீவிர டிஸ்கஷன் நடத்தி வருகிறாராம். இதனிடையே தாம் செயல் தலைவர் பொறுப்பேற்றால், தாம் வகித்து வரும் பொருளாளர் பதவியில் எல்.கே.சுதீஷை அமர வைக்கவும் அவர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தை பிறந்தால்

தை பிறந்தால்

அந்த வகையில் தேமுதிகவில் நடைபெறவுள்ள மாற்றங்களின் அடிப்படையில் செயல்தலைவராக பிரேமலதாவும், பொருளாளராக எல்.கே.சுதீஷும், இளைஞரணிச் செயலாளராக விஜய பிரபாகரனும் புரோமோஷன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தை பிறந்தவுடன் ஜனவரி மாதம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+