Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

80+40 பாஜகவுக்கு செக்! அகிலேஷ் யாதவ் அரசியல் கணக்கு! உயிர் பெறும் ‘இந்தியா’ கூட்டணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 120 தொகுதிகளில் பாஜகவின் வெற்றியைத் தடுப்பதன் மூலம் மோடியை மீண்டும் பிரதமராக வரவிடாமல் தடுத்து விடலாம் என்று 'இந்தியா' கூட்டணி ஒரு திட்டம் வகுத்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா காந்தி மைதானத்தில் கூடிய கூட்டத்தைக் கண்டு பாஜக ஆடிப் போய் இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது பாஜக.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

இந்திய அளவில் பாஜக பலமாக உள்ள மாநிலங்களில் ஒன்று உத்தரப் பிரதேசம். வழக்கம் போல் வாரணாசியில்தான் மோடி போட்டியிடப் போகிறார். உபியில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. அதில் 99% இடங்களைக் கடந்த தேர்தலில் பாஜக வென்றது.

ஆனால், இந்த முறை அது நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. ராமர் கோயிலைத் திறந்து வைத்ததன் மூலம் பாஜகவின் வெற்றியை உபியில் உறுதி செய்து விடலாம் எனக் கணக்குப் போட்டது பாஜக.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

அதற்கு நேர்மாறாக மாறி உள்ளது சூழ்நிலை. கடந்த முறை சந்தித்த தோல்வியிலிருந்து நிறையப் பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளார் அகிலேஷ் யாதவ். ஆகவே அவர், இந்தியா கூட்டணிக்குள் இருந்து அந்த மாநிலத்தை மட்டும் இல்லாமல் பீகாரையும் சேர்த்து பாஜகவை வீழ்த்த திட்டங்களை வகுத்து வருகிறார்.

அந்தத் திட்டத்திற்குச் சரியான பதிலைச் சொல்லி இருக்கிறது தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் கூட்டிய கூட்டம்.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் மார்ச் 3ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று பிப்ரவரி 22ஆம் தேதியே முடிவு செய்யப்பட்டது. வெறும் 8 முதல் 10 நாட்கள்தான் இடைவெளி இருந்தது. அதற்குள் இந்தப் பொதுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதுவும் எதிர்க்கட்சிகளை மிரட்டும் அளவுக்குக் கூட்டம் கூட்ட வேண்டும். அப்படி ஒரு சவாலை ஏற்று நடத்த ஆர்ஜேடி முடிவு
செய்தது.

பாட்னாவின் வானிலை மிக மோசமாக இருந்தது. 15 மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தது. இந்தப் பொதுக்கூட்டம் ஒருங்கிணைப்பு செய்த காலம் அதிக முகூர்த்தங்கள் நடைபெறும் மாதம். இப்படி ஒன்று கூட பொதுக்கூட்டம் நடத்துவதற்குச் சாதகமாக இல்லை. ஆனாலும் 'ஜன விஷ்வாஸ் பேரணி'யின் நிறைவு விழாவை நடத்திக் காட்டுவது என முடிவு செய்தார் தேஜஸ்வி.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

அவர் நினைத்ததைத் தாண்டி 15 லட்சம் மக்கள் குவிந்ததாக ஒரு கணக்கு சொல்கிறது. அதில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், காந்தி மைதானம் கழுகுப் பார்வையில் படமாக்கப்பட்ட போது கூட்டத்தால் திணறியது மைதானம். ஒருவர் மீது மற்றொருவர் உட்கார்ந்திருப்பதைப் போன்ற காட்சி. கால் வைக்கக் கூட சரியான இடவசதி இல்லாத அளவுக்குக் கூட்டநெரிசல்.

பாட்னாவில் நடத்தப்பட்ட கூட்டங்களில் இந்தக் கூட்டம் வரலாற்றுச் சாதனை என்று அந்த மாநில பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

சொல்லப்போனால்,'இந்தியா' கூட்டணி பீகாரில்தான் உதயமானது. நிதிஷ்குமார்தான் முதல் கூட்டத்தைக் கூட்டினார். அதற்குப் பிறகுதான் பெங்களூரில் கூடினார்கள். அடுத்து மும்பையில் கூடினார்கள்.

இதற்கு நடுவில் 5 மாநிலங்களில் தேர்தல் வந்தது. அதில் காங்கிரஸ் அதிக அளவில் வெற்றிபெறவில்லை. தெலங்கானா காங்கிரசுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்தது.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

நிதிஷ்குமார் வெளியேறிய போது ஊடகங்கள் அதனால், இந்தியா கூட்டணிக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகப் பேசின. ஆனால், அதனால் 'இந்தியா' கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது பாட்னா கூட்டம்.

இந்தியா கூட்டணி பிரச்சினை இல்லாமல் ஸ்மூத் ஆகப் போய்க் கொண்டிருந்த போது மம்தா 'இந்தியா' கூட்டணிக்குள் இல்லாமல் தனித்துப் போட்டியிடுவோம் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியும் அதே பாணியில் களம் இறங்கியது. அப்போது 'இந்தியா' கூட்டணி சலசலத்துப் போன மாதிரி ஒரு தோற்றம் உண்டானது.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

இந்தப் பரபரப்புக்கு மத்தியில் அகிலேஷ் யாதவ் 'இந்தியா' கூட்டணியோடு தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் இறங்கினார். அப்போது மறுபடியும் சின்ன நம்பிக்கை எழுந்தது.

உத்தரப் பிரதேசம் இந்திய அரசியலில் முக்கியமான மாநிலம். 80 தொகுதிகளைக் கொண்ட மாநிலம். அங்கே உள்ள ஒரு பிரதான அரசியல் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணியோடு தொகுதிப் பங்கீட்டுக்கு வந்தது பெரிய அளவில் பேசு பொருளானது.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

இதேகாலகட்டத்தில் ஆம் ஆத்மி 'இந்தியா' கூட்டணியை உறுதி செய்தது. மகாராஷ்டிராவில் கூட்டணி உறுதியானது. விரைவில் மம்தாவும் இந்தக் கூட்டணிக்குள் கட்டாயம் வருவார் என்றே சொல்லப்படுகிறது.

இதன் மூலம் பாஜகவை எதிர்த்து 300 தொகுதிகளுக்கு மேல் 'இந்தியா' கூட்டணி பொது வேட்பாளர்களை நிறுத்துவதற்கான திட்டம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

பீகாரில் நிதிஷ்குமார் ஒரு மூத்த அரசியல்வாதி. அவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடன் அரசியல் கற்றவர். அவர் இருக்கும் வரை இளம் அரசியல் தலைவரான தேஜஸ்வி யாதவுக்கு சில தர்மசங்கடங்களிருந்தன. நிதீஷ் வெளியேறிய பிறகு பீகாரில் 'இந்தியா' கூட்டணியை வழிநடத்தும் அதிகாரம் தேஜஸ்விக்குத் தானாக வந்துசேர்ந்தது.

அதை உணர்ந்த அவர் பீகார் முழுக்க ஜன் விஸ்வாஸ் யாத்ரா என்று நடத்தி வந்தார். இந்தப் பயணத்தின் மூலம் ஆர்ஜேடிக்கு மாநில முழுக்க ஒரு மறு உயிரைக் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் நிறைவு விழாதான் பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

அகிலேஷ் யாதவ், ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் , மல்லிகார்ஜுன கார்கே, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி எனப் பல கூட்டணி தலைவர்கள் கூடினர்.

பீகாரில் தேஜஸ்வி அமைத்துள்ள கூட்டணிக்கு May alliance என்று ஆளும் கட்சி பெயர் வைத்துள்ளது. அப்படி என்றால் முஸ்லிம் மற்றும் யாதவ் கூட்டணி என்று பொருள். ஆனால், அதை ஆர்ஜேடி மறுத்துள்ளது.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

இது 'மை' கூட்டணி இல்லை. நிதிஷ்குமாருக்குப் பாடம் கற்றுத்தரப் போகும் கூட்டணி. அவரது அரசியல் லாபத்திற்காக அணி மாறிவருவதை மாற்றிக் காட்டப் போகும் கூட்டணி என்று தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்து வருகிறார்.

ராகுல் கூட்டணியில் பேசும் போது, 'நாம் திறந்துள்ளது அன்பு கடை. பாஜக திறந்துள்ளது வெறுப்பு அரசியல் கடை. யாரும் வெறுப்பை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அன்பைத்தான் விரும்புவார்கள். ஆகவே 'இந்தியா' கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்' என்று சொல்லியிருந்தார்.

Plan to defeat BJP in 120 constituencies Akhilesh Yadav s strategy

அகிலேஷ் இந்தக் கூட்டத்தின் மூலம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார். உபியிலும் பீகாரிலும் 120 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் அதிக இடங்களை நாம் வெற்றி பெற்றுவிட்டால் பாஜகவின் வெற்றியைத் தடுத்து விட முடியும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திலுள்ள இடங்களில் 5 இல் ஒரு பங்கை இந்த இரண்டு மாநிலங்களும் கையில் வைத்துள்ளது. அதை உடைப்பதன் மூலம் பாஜகவின் கனவை உடைக்க முடியும் என்று சொல்கிறார் அகிலேஷ். அந்த அரசியல் கணக்கில் உண்மை இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+