ஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..??
தன்னை பற்றி தவறாக பரப்பப்படும் செய்திக்கு விளக்கம் தந்துள்ளார் சுசித்ரா
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கும் பாடகி சுசித்ரா, தன்னை பற்றி வெளியான ஒரு செய்திக்கு மறுப்பு கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.. இதில் யாரையாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக புது போட்டியாளரை உள்ளே அடிக்கடி அனுப்புவது வழக்கம்.

அந்த வகையில், பின்னணி பாடகி சுசித்ரா விரைவில் செல்லவிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இதற்காகவே சுசித்ராவை சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் அடுத்த செய்திகள் வெளிவந்தன.
இதன்பிறகு, மற்றொரு செய்தியும் 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. அதன்படி, சில தினங்களுக்கு அந்த ஸ்டார் ஓட்டலில் நடுராத்திரி சுசித்ரா கதறி கொண்டே தன்னுடைய ரூமில் இருந்து வெளியே ஓடிவந்தாராம்.. அப்படி வரும்போது, "என்னை கொலை செய்ய வர்றாங்க.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என் ரூம் கதவை யாரோ தட்டுறாங்க" என்று பதறியபடி வந்து அந்த ஓட்டல் ரிசப்ஷனில் புகார் செய்தாராம்
உடனே ஓட்டல் தரப்பில், அப்படியெல்லாம் இங்கே நடக்க வாய்ப்பே இல்லை.. எல்லாரும் இங்கே இருக்கோம்.. ஒன்னும் பயப்பட வேண்டாம்.. என்று தேற்றினார்களாம்.. அத்துடன் பிக்பாஸ் தரப்பில் இருந்தும் இதற்கு பதில் அளித்து சமாதானம் செய்தபிறகே சுசித்ரா அவர் ரூமுக்கு சென்றாராம். இந்த செய்திதான் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதெல்லாம் சுத்த பொய் என்று விளக்கம் அளித்துள்ளார் சுசித்ரா..
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் சொல்லி உள்ளதாவது: சில தவறான செய்திகளுக்கு நான் விளக்கம் தர இருக்கிறேன்.. என் ரூமில் நான் பயந்துவிட்டதாகவும் வெளியே நடமாடியதாகவும் வெளியான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்... நான் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்... இங்கே எல்லாரும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு காட்சி என் ரூமில் இருந்து கிடைக்கும்போது யார் புகார் அளிப்பார்கள்" என்று சொல்லி தன்னுடைய ரூமை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இன்னும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இவர் நுழையவில்லை.. அதற்குள் சுசித்ரா வேற லெவலில் ஃபேமஸ் ஆகி கொண்டிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்களை சொல்லி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications