டாக்டர் பட்டம்.. மேடையில் தவறி விழுந்த பாடகி பி.சுசீலா! தாங்கி பிடித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்கினார். இந்த வேளையில் மேடையில் நின்ற பி சுசீலா தடுமாறி விழுந்தபோது முதல்வர் ஸ்டாலின் கையை அவர் இறுக பிடித்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் இசையியல் அறிஞர் பிஎம் சுந்தரம் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக டாக்டர் பட்டம் வாங்க பாடகி பி சுசீலா மேடைக்கு வந்து அமர்ந்திருந்தார். பட்டங்கள் வழங்கும் முதல்வர் ஸ்டாலினும் மேடையில் போடப்பட்டு இருந்து இருக்கையில் அமர்ந்து இருந்தார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்க பாடகி பி சுசீலா அருகே எழுந்து சென்றார்.
அந்த சமயத்தில் இருக்கையில் இருந்து பி சுசீலா எழுந்து நின்றார். முதல்வர் ஸ்டாலின் அருகே சென்றபோது பி சுசீலா நிலைத்தடுமாறி தனது இருக்கையில் விழுந்தார். இந்த வேளையில் அவர் முதல்வர் ஸ்டாலினின் கையை இறுக பிடித்தார்.
அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் மற்றும் மறுப்பக்கம் நின்ற அமைச்சர் சாமிநாதன் ஆகியோரின் கைகளை பிடித்து சுசீலா மீண்டும் எழுந்து நின்று கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பி சுசீலாவுக்கு 87 வயது ஆகிறது. இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவரது பெயர் ‛ஆசிய புக் ரெக்கார்ட்ஸ்' மற்றும் ‛கின்னஸ்' புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. மேலும் இவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏராளமான விருதுகளை அவர் வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications