"முதலாளி அடிக்கிறான்".. எப்படியாவது காப்பாத்துங்க விஜய் அண்ணா.. மலேசியா சென்ற தமிழ் இளைஞர் வீடியோ
சென்னை: ''மலேசியாவில் மூன்றரை வருடமாக மாட்டிக்கொண்டேன். தினமும் முதலாளி அடிக்கிறார். சம்பளத்தை நிறுத்தி பாடாய்படுத்துகிறார். வீட்டுக்கு சம்பளம் அனுப்ப முடியவில்லை. ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன். என்னால் ஒன்றும் பண்ண முடியவில்லை. நீங்கள் தான் பார்த்து என்னையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் என்னுடைய உயிர் போய்விடும்'' என்று கள்ளக்குறிச்சி இளைஞர் ஒருவர் அழுதபடி வெளியிட்ட வீடியோ கலங்க வைத்துள்ளது.

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு டிரைவர், ஹோட்டல் பணி, கட்டுமான பணி, வெல்டிங், நர்சிங், வீட்டு வேலை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகமாக செல்கின்றனர்.
தமிழகத்தை விட அதிகமான சம்பளம் கிடைப்பதால் வெளிநாட்டை நோக்கி அவர்கள் செல்கின்றனர். இப்படி செல்வோர் அனைவருக்கும் வெளிநாட்டு வாழ்க்கை இனிமையானதாக இருப்பது இல்லை. ஏராளமானவர்கள் ஏமாற்றமடைகின்றனர். இன்னும் சிலர் துன்புறுத்தப்படுகின்றனர்.
அந்த வகையில் தான் மலேசியாவில் ஹோட்டல் பணிக்கு சென்ற தமிழக இளைஞர் ஒருவர் தனது முதலாளி தன்னை அடித்து துன்புறுத்தி சம்பளத்தை நிறுத்தி வைப்பதாகவும், முதல்வர் விஜய் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்டவரின் பெயர் ஆரோன். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமராஜபுரத்தை சேர்ந்தவர்.
இவர் மலேசியாவிற்கு ஹோட்டல் வேலைக்கு சென்றார். இந்நிலையில் தான் அவர் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ''விஜய் அண்ணன்.. முதல்வர் அண்ணன் வணக்கம்.. நான் இங்கே மலேசியா வந்து மூன்றரை வருடம் ஆகிறது. இந்த மூன்றரை வருடத்தில் நான் இங்கு மாட்டிக்கொண்டேன். தினமும் முதலாளி அடிக்கிறார். சம்பளத்தை நிறுத்துகிறார். பாடாய்படுத்துகிறார்.
எனக்கு என்ன பண்ணணும்னு தெரியவில்லை. என்னுடைய குடும்பத்துக்கும் சம்பளம் அனுப்ப வேண்டும். ஆனால் சம்பளம் அனுப்ப முடியவில்லை. ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன். என்னால் ஒன்றும் பண்ண முடியவில்லை. நீங்கள் தான் பார்த்து என்னையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் என்னுடைய உயிர் போர்விடும் அண்ணன்'' என்று அழுதபடி கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முதல்வர் விஜய் உதவி செய்வாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
