ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை
சென்னை: கேரளாவில் இப்போது ஒரு விசித்திரமான செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது, இதைப்பற்றி கேள்விப்பட்டால் நமக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.. எர்ணாகுளம் குழிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு இளம் பெண் விடுத்துள்ள கோரிக்கை, அம்மாநிலத்தை மட்டுமல்ல, பொதுமக்களையும் சேர்த்தே வியப்பில் ஆழ்த்தி வருகிறது.. என்ன நடந்தது?
எர்ணாகுளம் குழிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் அந்த பெண்ணுக்கு வரும் 29-ம் தேதி திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.. கல்யாணம் என்றாலே புதுமணத் தம்பதிகள் அடுத்து எங்கே ஹனிமூன் செல்லலாம் என்றுதான் முதலில் யோசிப்பார்கள்.

கேரளா அரசு பள்ளி ஆசிரியை
அதுபோலவே இந்த டீசசரும் தனது வருங்கால கணவருடன் சேர்ந்து ஒரு அழகான ஹனிமூன் பயணத்திற்குத் திட்டம் போட்டிருக்கிறார்.. அதுவும் அவர்கள் போக நினைத்த இடம் சாதாரண இடமில்லை, லடாக் பகுதிக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.
அதாவது ஏப்ரல் 7-ம் தேதியிலிருந்து 5 நாட்களுக்கு அங்கேயே தங்கி தேனிலைவை கழித்துவிட்டு வரலாம் என்று கணக்கு போட்டுள்ளார்கள்.. இதற்காக சுமார் 1.15 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலவழித்து விமான டிக்கெட்டுகள், அங்கே தங்குவதற்கு லாட்ஜ் என எல்லாவற்றையும் முன்கூட்டியே முன்பதிவு செய்துவிட்டார்கள்..
ஹனிமூன் கோரிக்கை
ஆனால் சொந்த ஊரில் ஒரு பெரிய சிக்கல் முளைத்திருக்கிறது.. கேரளாவில் இப்போது தேர்தல் காய்ச்சல் தொடங்கிவிட்டதால், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக ஆசிரியர்களுக்குத்தான் இதில் அதிக வேலை இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்..
அதுபோல இந்த ஆசிரியைக்கும் தேர்தல் பணி வந்துவிடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.. ஒருவேளை தேர்தல் வேலை வந்துவிட்டால், கஷ்டப்பட்டுச் சிறுக சிறுக சேர்த்துத் திட்டம் போட்ட அந்த ஹனிமூன் பயணம் அப்படியே பாழாகிவிடுமே என்று பதறியே போய்விட்டார்..
கலெக்டரிடம் வித்தியாசமான மனு
முன்பதிவு செய்த அந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணமும் வீணாகிவிடும், மனநிம்மதியும் போய்விடும் என்பதால் டீச்சர் ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.. நேராக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் உமேஷ் என்பவரைச் சந்திக்கக் கலெக்டரேட் அலுவலகத்திற்கே சென்று ஒரு மனுவைக் கொடுத்திருக்கிறார்..
அதில், "ஐயா, எனக்கு வரும் 29-ம் தேதி கல்யாணம் முடிகிறது, அதன்பின் ஹனிமூனுக்காக லடாக் செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டோம், தயவுசெய்து எனக்கு அந்த நேரத்தில் தேர்தல் பணி கொடுத்து என் பணத்தையும் சந்தோஷத்தையும் கெடுத்துவிடாதீர்கள்" என்று உருக்கமாக கோரிக்கை வைத்திருக்கிறார்..
தேர்தல் பணி
அதுமட்டுமல்லாமல் நில்லாமல் தான் முன்பதிவு செய்த விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் ரசீதுகளையும் ஆதாரமாக இணைத்து கொடுத்திருக்கிறார்.. பொதுவாக விடுமுறை கேட்டு ஆசிரியர்கள் விண்ணப்பிப்பார்கள், ஆனால் இப்படி தேர்தல் பணிப் பட்டியல் தயார் செய்வதற்கு முன்பே ஒரு புதுப்பெண் கலெக்டரிடம் முறையிடுவது அந்தப் பகுதியில் பெரிய பேச்சாக மாறியிருக்கிறது..
அந்த மனுவைப் பார்த்த கலெக்டர் உமேஷ், "நிச்சயம் பரிசீலனை செய்கிறேன்" என்று அந்தப் பெண்ணுக்குப் புன்னகையுடன் ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்கிறாராம்..
டீச்சருக்கு பணி விலக்கு கிடைக்குமா?
தேர்தல் ஆணையம் இதுபோன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக விதிவிலக்கு அளிக்குமா என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த ஆசிரியையின் துணிச்சலையும் அவர் தனது பயணத்தின் மீது வைத்துள்ள ஆர்வத்தையும் பார்த்துப் பலரும் வியந்து பேசிக்கொள்கிறார்கள்..
இந்தச் செய்தி இப்போது சமூக வலைதளங்களிலும் அந்த ஊர் டீக்கடைகளிலும் ஒரு சூடான விவாதப் பொருளாகவே மாறிவிட்டது.. கடைசி நேரத்தில் டீச்சருக்கு லடாக் செல்ல அனுமதி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications