பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹேப்பி.. நாளை மதியம் 3 மணிக்கு ரெடியா இருங்க.. தமிழக பள்ளிக்கல்வி துறை அதிரடி
சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்றது.. அந்தவகையில், 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.

12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், 11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 14ம் தேதி வெளியாகியிருந்தது. சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் இந்த ரிசல்ட் வெளியிடப்பட்டது..
விடைத்தாள்: இந்நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பில் உள்ளதாவது:
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு வரும் 31ம் தேதி மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவம்: www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மே 31 (வெள்ளிகிழமை) காலை 11 மணி முதல் ஜூன் 4 (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
கட்டண விவரம்:
மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505
மறுகூட்டல்-II
உயிரியல்-ரூ.305
மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205
என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications