பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்கள் கவனத்திற்கு.. துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.. முழு விவரம்!
சென்னை : தமிழ்நாட்டில் நடந்த பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை சுமார் 7.50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதனைத் தொடர்ந்து பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 94.56 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

அதேபோல் 5.44 சதவிகித மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுவாய்ப்பு கொடுக்கும் வகையில் துணைத் தேர்வு நடத்தப்படும். அந்த துணைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிக்கு நேரில் செல்ல வேண்டும் எனவும், தனித்தேர்வர்கள் மாவட்ட இ-சேவை மையத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் இதே விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, துணைத் தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 1ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.ல் அதேபோல் பிளஸ் 1 துணைத் தேர்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜூன் 24ஆம் தேதி மொழித் தேர்வும், 25ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும், 26ஆம் தேதி பயோ-கெமிஸ்ட்ரி, கம்யூனிகேட்டர் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ், பேசிக்ஸ் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய தேர்வுகள் நடக்கவுள்ளது. அதேபோல் ஜூன் 27ஆம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல் தேர்வு நடக்கவுள்ளது. ஜூன் 28ஆம் தேதி இயற்பியல், எகனாமிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வும் நடக்கவுள்ளது.
அதேபோல் ஜூன் 29ஆம் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு, பிசினஸ் மேக்ஸ், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ், பேசிக் மெக்கானிக்கல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி தேர்வுகள் நடக்கவுள்ளது. கடைசியாக ஜூலை 1ஆம் தேதி கணக்கு, விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ-பயாலஜி, டெக்ஸ்டைல் மற்றும் ட்ரஸ் டிசைனிங், அக்ரிகல்சுரல் சயின்ஸ், நர்சிங் ஆகிய தேர்வுகள் நடக்கவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications