12th exam results: மே 8-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்தெந்த இணையதளத்தில் பார்க்கலாம்?
சென்னை: மே 8 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இரு தேர்வுகளுக்கு மாணவர்கள் சிலர் வராததால் அதுகுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து யோசனை செய்து முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த தேர்வை 8.75 லட்சம் பேர் எழுதவிருந்தனர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45, 982 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியிருந்தனர். இந்த தேர்வுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தன. கடந்த ஓராண்டாக விழுந்து விழுந்து அயராது படித்த மாணவர்கள் கடைசி தேர்வன்று மகிழ்ச்சியாக இருந்தனர்.
கோடை விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் துள்ளி குதித்துகொண்டு வீடு திரும்பினர். இந்த நிலையில் மே 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாற்றம் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படவுள்ளது. மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடப்பதால் முதல்வருடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும். திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால் அது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு மன உளைச்சலை கொடுக்கக் கூடாது என்பதற்காக மே 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
மே 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இவற்றை www.tnresult.nic.in, www.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் வெளியாகிறது. இந்த வெப்சைட்டிற்குள் சென்று மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொடுத்தால் போதும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications