பிளஸ் 2 முடித்த மாணவர்களே..கால்நடை மருத்துவராக விருப்பமா? ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 12ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பிவிஎஸ்சி - ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு 2023-24-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை ,நாமக்கல் ,திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை ,தேனி வீரபாண்டி ஆகிய ஏழு இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் காலியாக உள்ளன . திருநெல்வேலி, ஒரத்தநாடு, சென்னை, நாமக்கல் ஆகிய நான்கு கல்லூரிகளின் 420 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இது போக தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

இந்த சூழலில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 12ஆம் தேதி முதல் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள் , உணவு தொழில்நுட்ப படிப்பில் மூன்று இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் இரண்டு இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் மூன்று இடங்களிலும் மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக். படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பிரிவில் 20 இடங்கள் உள்ளன.
இதில், உணவு தொழில்நுட்ப படிப்புக்கான 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் போக, எஞ்சியுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
இந்நிலையில், பிவிஎஸ்சி - ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு 2023-24-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ம் தேதி காலை 10 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள் மற்றும் நிதிஆதரவு பெற்றோர், வெளிநாட்டினருக்கான இடஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள், மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
7.5% உள் இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications