பிரதமர் வேட்பாளர் யார்? சத்யமூர்த்தி பவனில் சிரித்து கொண்டே கடந்து சென்ற புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சத்யமூர்த்தி பவனில் வைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கையெடுத்து கும்பிட்டு சிரிப்புடன் கடந்து சென்றனர். ராகுல் காந்தியின் பெயரை தவெக அமைச்சர்கள் சொல்லாமல் அமைதி காப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

கடந்த ஒரு மாதமாகவே அடுத்த பிரதமர் விஜய் என்று அமைச்சர்கள் செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல்குமார், கில்லி சரத், ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, விஜய் பாலாஜி உள்ளிட்ட பலரும் பேசி வருகின்றனர். இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 9.2% ஆதரவு இருப்பதாக தெரிய வந்த பின், இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் என்று தவெகவினரும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினர்.

TVK Aadhav Arjuna PM Candidate

இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சி தலைமை வரை சென்றுவிட்டது. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யை சந்தித்து ஆலோசித்தனர். இதன்பின்னரும் கூட தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், ராகுல் காந்தி தான் விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போகிறார் என்று பேசி அதிர்ச்சி கொடுத்தார்.

இதற்கு காங்கிரஸ் சட்டசபைக்குழு தலைவர் தாரகை கத்பர்ட் பதிலடி கொடுத்தார். ஆனாலும் தவெகவினர் மத்தியில் இந்த பேச்சு ஓய்ந்தபாடில்லை. இப்படியான சூழலில், தவெக ஆதரவு கட்சிகளின் ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி கோவளத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே ஜூலை 1ஆம் தேதி இதன் முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அப்போது ராஜ்ய சபா எம்பி பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. இதன்பின் சத்யமூர்த்தி பவனில் இருந்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவரும் வெளியில் வந்தனர். அப்போது தவெகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு புஸ்ஸி ஆனந்த் சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

ஆதவ் அர்ஜுனா கையெடுத்து கும்பித்து புன்னகையுடன் கடந்து சென்று வேகமாக காரில் ஏறினார். சத்யமூர்த்தி பவனிலேயே ராகுல் காந்தியின் பெயரை சொல்ல தவெகவின் சீனியர் நிர்வாகிகள் தயக்கம் காட்டுவது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதனால் செப்டம்பர் 9ல் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறும் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+