பிரதமரின் வீட்டுவசதி திட்டம் 2.0.. 26 மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. பணிகள் துவங்குவது எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0-ன் கீழ் தமிழகத்திற்கு முதல்கட்டமாக ரூ.33.22 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்து அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியிருக்கிறது.. சென்னை, கோவை, மதுரை உட்பட 26 மாவட்டங்களை சேர்ந்த 151 திட்டங்களுக்கு இந்த நிதி கைமாறியுள்ளதால் சொந்த வீடு கனவில் இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் செம குஷியல் உள்ளன.. இதனிடையே, இந்த பணிகளை விரைந்து தொடங்க மாநில அரசு வழங்க வேண்டிய பங்கு தொகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.!!

சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் நோக்கில், மத்திய அரசு சார்பில் "பிரதமரின் வீட்டுவசதி திட்டம்" நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

PM Housing Scheme 2 0 PMAY 2 0 Housing Scheme PMAY 2 0

சொந்த வீடு கனவு

கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் கடன் மானியங்கள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டித் தரப்பட்டன.

இந்த திட்டத்தின் முந்தைய கட்டங்களுக்கான கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒப்புக் கொள்ளப்பட்ட நிலுவைப் பணிகள் மட்டுமே இப்போது வரை தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த சூழலில் தான், நாடு முழுவதும் மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் நோக்கில் "பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0" என்ற 2ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து, அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியது.

தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

இந்த புதிய 2ம் கட்ட திட்டத்தின் கீழ் பயன்பெற, தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதாவது சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய 26 மாவட்டங்களில் இருந்து இந்த விரிவான திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டிருந்தன.

தமிழக அரசின் இந்த பரிந்துரைகளை தீவிரமாக ஆய்வு செய்த மத்திய அரசு, தற்போது முதல்கட்டமாக 151 வீட்டுவசதி திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியாக ரூ.33.22 கோடியை உடனடியாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக் கடிதமும் தமிழக அரசுக்கு சமீபத்தில் வந்து சேர்ந்துள்ளது.

மத்திய அரசின் நிதி விடுவிப்பு

மத்திய அரசின் இந்த நிதி விடுவிப்பு குறித்து நகர்ப்புற வாழ்விட வாரிய அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, 26 மாவட்டங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்களில் 151 திட்டங்களுக்கு முதல்கட்ட நிதி கைமாறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் இத்திட்டங்களை களத்தில் முழுமையாகச் செயல்படுத்த மத்திய அரசின் நிதியோடு மாநில அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டிய பங்கு தொகையும் மிகவும் அவசியமாகும். அதனால் மாநில அரசின் பங்குத் தொகையை விடுவிப்பது தொடர்பான அரசின் இறுதி முடிவிற்காக வாழ்விட வாரிய அதிகாரிகள் இப்போது ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக பட்ஜெட் நிதி ஒதுக்கீடு

நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இதுகுறித்த குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டு அறிவிப்புகள் எதுவுமே வெளிவரவில்லை.. அதனால் விரைவில் வரவிருக்கும் சட்டப்பேரவை துறை சார்ந்த மானிய கோரிக்கையின்போது மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, மத்திய அரசின் இந்த திடீர் நிதியுதவி மற்றும் கடிதம் காரணமாக, தமிழகத்தில் சொந்த வீட்டின் கனவோடு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+