தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது.. ஒவ்வொருத்தர் அக்கவுண்டுக்கும் ரூ.2000 வரப் போகுது! லீக்கான நியூஸ்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழக்கமாக வழங்கும் 2000 ரூபாய் நிதியுதவியை முன்னதாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் வங்கி கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும், விவசாயிகள் தங்களது e-KYC நடைமுறையை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா 2000 ரூபாய் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி நிதியை நாளை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

இதுவரை 23 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள நிலையில், 24வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் எப்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படவுள்ளது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக அரசு அமைந்த பிறகு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளும், மானியம், நிதி உதவி உள்ளிட்டவையும் ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. முன்னதாக தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 23 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த ஜுன் மாதம் மாதம் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 23ஆவது தவணை பிஎம் கிசான் நிதியை விடுவித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 24வது தவணை நிதி உதவி எப்போது வெளியிடப்படும் என விவசாயிகள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.2,000 நிதியுதவியை அக்டோபர் 2026-க்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக விவசாயிகள் ekysஐ நிறைவு செய்திருக்க வேண்டியது கட்டாயம். இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் விவசாயிகள் அருகில் உள்ள சிஎஸ்இ மையங்களை தொடர்பு கொள்ளலாம். இதற்காக பிஎம் கிசான் சம்மன் நிதியின் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பயனாளிகளின் தங்கள் நிலையை அறியலாம்.
தொடர்ந்து உங்கள் ஆதார் எண் அல்லது பிஎம் கிசான் திட்ட எண்ணை கொடுத்தால் உங்களது தரவுகளை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து பயனாளியின் நிலை மற்றும் கட்டண நிலை குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பிஎம் கிசான் மொபைல் அப்ளிகேஷன் மூலமும் பயனாளிகள் தங்கள் நிலையை அறிந்து கொள்ளலாம்.
கூகுள் பிளே ஸ்டோரில் பிஎம் கிசான் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, ஆதார் எண் பதிவிட்டு ஓடிபி உள்ளீடு செய்தால் டேஷ் போர்டில் பயனாளிகள் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும் மற்ற விவரங்களையும் இந்த அப்ளிகேஷனை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயிகள் தங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபாத்துக் கொள்ள முடியும்.




Click it and Unblock the Notifications
