இரவோடு இரவாக.. தமிழ்நாட்டில் 47 லட்சம் பேருக்கு..அனுப்பப்பட்ட ரூ.2000.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா?
சென்னை: பிஎம்-கிசான் சம்மான் நிதி திட்டத்தின் இந்த மாத தவணைத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் கடந்த 3 நாட்களாக இந்த பணம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர்.

பிஎம்-கிசான் திட்டம்: தமிழக விவசாயிகள்
தமிழகத்தில் சுமார் 47 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.24 லட்சம் விவசாயிகள் இந்தத் தவணைத் தொகையினைப் பெற்றுள்ளனர்.
பிஎம்-கிசான் திட்டம் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் செலுத்தப்படுகிறது. முன்னதாக, கிருஷி சகி ஒருங்கிணைப்புத் திட்டத்தின் (KSCP) கீழ் 30,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களில் (SHGs) உள்ள பெண்களுக்கு 'கிருஷி சகிஸ்' என்ற சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, சுமார் 9.25 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் மத்திய அரசு செலுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் ரூ.3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிஎம்-கிசான்: பயன்கள்
கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்ட நிதியின் மூலம், பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தப் பலன்கள் ரூ. 3.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2019-ல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.26 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டு உள்ளது.
பிஎம்-கிசான்: பயனாளிகள் தங்களது நிலையைச் சரிபார்க்கும் முறை
பிஎம்-கிசான் திட்டத்தில் பணம் பெற நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். மேலும், உங்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கை கேஎப்சி உடன் சரிபார்த்து இருக்க வேண்டும். அதோடு உங்கள் தொலைபேசி எண்ணை வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டம் மூலம் உங்களுக்கு பணம் வந்துள்ளதா என்பதைச் சரிபார்க்க, கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:
படி 1: அதிகாரப்பூர்வ PM Kisan இணையதள பக்கத்தில் லாக் இன் செய்யவும்.
படி 2: லாக் இன் செய்தவுடன் Beneficiary Status Page என்ற பக்கம் காட்டும். அந்த பக்கத்திற்கு செல்லவும்.
படி 3: அங்கே உள்ள "Beneficiary Status" என்பதைக் கிளிக் செய்தால் அடுத்த பேஜ் திறக்கும்.
படி 4: நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்தால் உங்கள் லாக் இன் கணக்கை எடுத்து வைத்துக்கொள்ளவும். அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் உள்ளே செல்ல முடியும்.
படி 5: அந்த பக்கத்தில் "Get Data" என்பதைக் தேர்வு செய்து உங்கள் விவரங்களை பார்க்கலாம். நீங்கள் திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதை சோதனை செய்ய முடியும்.
படி 6: இதிலேயே உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்த்து சோதனை செய்து கொள்ள முடியும்.
பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications