இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்! மோடி சைலண்ட் சம்பவம்.. ஆரம்பமே அல்லோகலம்
சென்னை: பிரதமர் மோடி மூலம் நேற்று அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இந்த அமைச்சரவை பெரிய அளவில் முந்தைய அமைச்சரவையை விட மாற்றம் இன்றி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக தனிப்பட்ட வகையில் பெற முடியாமல் படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நேற்று பாஜக பதவி ஏற்றது.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் நேற்று அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டது.
இலாக்கா ஒதுக்கீடு: இந்த இலாக்கா ஒதுக்கீட்டில் பின் வரும் சம்பவங்கள் நடந்து உள்ளன.
1. இதுக்கு பருத்தி மூட்டையை குடோன்லேயே இருந்திருந்திருக்கலாம் என்று சொல்லும் வகையில் நிதித்துறை தொடங்கி வெளியுறவுத்துறை வரை எல்லா முக்கிய துறைகளுக்கும் அமைச்சர்கள் மாற்றப்படாமல் உள்ளனர்.
2. இது அதே மோடி ஆட்சிதான்.. கூட்டணி ஆட்சி இல்லை என்பதை சைக்காலஜிக்களாக உணர்த்தி உள்ளனர்.
3. கூட்டணி கட்சிகளுக்கு பெரிய அளவில் இடங்கள் கொடுக்கப்படவில்லை. உதாரணமாக பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் மதசார்பாற்ற ஜனதா தளம் தலைவர் அமைச்சர் குமாரசாமிக்கு கனரக தொழில்துறை அமைச்சர் மற்றும் எஃகு துறை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. அவர் கேட்ட வேளாண்துறை வழங்கப்படவில்லை.
4. கூட்டணி கட்சிகளுக்கு பெரிய அளவில் இடங்கள் கொடுக்கப்படவில்லை.
5. அமித் ஷா, நிர்மலா, ஜெய்சங்கர், நிதின் கட்கரி, அஸ்வினி ஆகிய டாப் 5 அமைச்சர்கள் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் மாற்றப்படவில்லை.
அமைச்சர்கள் லிஸ்ட்:
1. ராஜ் நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர்.
2. அமித் ஷா
உள்துறை அமைச்சர்; மற்றும்
கூட்டுறவு அமைச்சர்.
3. நிதின் ஜெய்ராம் கட்கரி
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
4. ஜகத் பிரகாஷ் நத்தா
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்; மற்றும்
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்.
5. சிவராஜ் சிங் சவுகான்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்; மற்றும்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.
6. நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர்; மற்றும்
கார்ப்பரேட் விவகார அமைச்சர்.
7. டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்
வெளிவிவகார அமைச்சர்.
8. மனோகர் லால்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர்; மற்றும்
மின்துறை அமைச்சர்.
9. எச்.டி.குமாரசாமி
கனரக தொழில்துறை அமைச்சர்; மற்றும்
எஃகு அமைச்சர்.
10. பியூஷ் கோயல்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்.
11. தர்மேந்திர பிரதான்
கல்வி அமைச்சர்.
12. ஜிதன் ராம் மஞ்சி
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்.
13. லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்; மற்றும்
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்.
14. சர்பானந்தா சோனோவால்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர்.
15. டாக்டர் வீரேந்திர குமார்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்.
16. கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.
17. பிரலாத் ஜோஷி
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்; மற்றும்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்.
18. ஜுவல் ஓரம்
பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.
19. கிரிராஜ் சிங்
ஜவுளித்துறை அமைச்சர்.
20. அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே அமைச்சர்;
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்; மற்றும்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.
21. ஜோதிராதித்யா எம்.சிந்தியா
தகவல் தொடர்பு அமைச்சர்; மற்றும்
வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.
22. பூபேந்தர் யாதவ்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர்.
23. கஜேந்திர சிங் ஷெகாவத்
கலாச்சார அமைச்சர்; மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர்.
24. அன்னபூர்ணா தேவி
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்
25. கிரண் ரிஜிஜு
பாராளுமன்ற விவகார அமைச்சர்; மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.
26. ஹர்தீப் சிங் பூரி
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்
27. டாக்டர் மன்சுக் மாண்டவியா
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்; மற்றும்
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.
28. ஜி. கிஷன் ரெட்டி
நிலக்கரி அமைச்சர்; மற்றும்
சுரங்கத்துறை அமைச்சர்.
29. சிராக் பாஸ்வான்
உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர்.
30. சி ஆர் பாட்டீல்
ஜல் சக்தி அமைச்சர்












Click it and Unblock the Notifications